Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை.. மத்திய அரசு விளக்கம்.!

தற்போது வரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு 13,10,90,000 டோஸ் கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை.. மத்திய அரசு விளக்கம்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  13 April 2021 7:14 PM IST

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை இல்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. நாட்டில் கடந்த ஒரு மாத்திற்கு மேலாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் தடுப்பூசி போடும் பணியை வேகப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டார்.

அதன்படி நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி திருவிழாவாக நடத்தப்பட்டு வருகிறது. அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.




இந்நிலையில், சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் கூறுகையில், தற்போது வரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு 13,10,90,000 டோஸ் கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது. மேலும், கேரளாவில் தடுப்பு மருந்து வீணடிக்கப்படவில்லை. ஆனால், மற்ற மாநிலங்களில் 8 முதல் 9 சதவீத டோஸ்கள் வீணடிக்கப்பட்டுள்ளன.





அதே போன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 11.43 கோடி டோஸ் தடுப்பு மருந்துகள் வீணாகியுள்ளது. இன்று காலை நிலவரப்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1,67,20,000 டோஸ்கள் தடுப்பு மருந்து உள்ளது. இது ஏப்ரல் இறுதியில் 2,01,22,960 ஆக அதிகரிக்கப்படும். இந்தியாவில் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை எப்போதும் வராது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News