Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைவு.!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 43 ஆயிரத்து 144 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைவு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  14 May 2021 12:10 PM IST

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 43 ஆயிரத்து 144 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ளது. உயிரிழப்புகளும் அதிகமாக உயர்ந்தது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வகையிலான வழிகாட்டு முறைகளை வெளியிட்டது.





இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 3 லட்சத்து 43 ஆயிரத்து 44 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,40,46,809 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் 37 லட்சத்து 4 ஆயிரத்து 893ஆக உயர்ந்துள்ளது.





அதே போன்று தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,00,79,599 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 3 லட்சத்து 44 ஆயிரத்து 776 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 4,000 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,62,317 ஆக உயர்ந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News