இந்தியாவில் 75 நாட்களுக்கு பிறகு 60 ஆயிரத்துக்கு கீழ் குறையும் கொரோனா பாதிப்பு.!
இந்தியாவில் 75 நாட்களுக்கு பின்னர் கொரோனா வைரஸ் தொற்றின் தினசரி பாதிப்பு 60000 ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புததாக 60,471 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

By : Thangavelu

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை 3 லட்சத்திற்கும் அதிகமான பேர் தினமும் பாதிக்கப்பட்டு வந்தனர். மத்திய அரசு எடுத்துள்ள தீவிர நடவடிக்கையால் தொற்று படிப்படியாக குறைந்து 60 ஆயிரத்துக்கு தற்போது வந்துள்ளது.
அந்த வகையில், 75 நாட்களுக்கு பின்னர் தினசரி பாதிப்பாக 60 ஆயிரமாக குறைந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு சிசிச்சைப் பெற்று வந்த 1,17,525 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,82,80,472 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் குணமடைந்தவர்கள் 95.64 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
மேலும், கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2726 ஆக பதிவாகியுள்ளது. மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,77,031 ஆகும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 9,13,378 ஆக உயர்ந்துள்ளது. மேலும் வரும் காலங்களில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்படும் நிலையில், தொற்று எண்ணிக்கையும் வேகமாக குறையும் என கூறப்படுகிறது.