உள்நாட்டு தேவைகள் பூர்த்தியான பிறகே கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி.. மத்திய அரசு முடிவு.!
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அது மட்டுமின்றி அடுத்த மாதம் (ஏப்ரல்) முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

By : Thangavelu
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், உள்நாட்டு தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட பின்னரே வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்தியா சார்பாக வெளிநாடுகளுக்கு இதுவரை 6 கோடி கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அவற்றில் அதிகமாக கோவிஷீல்டு தடுப்பு மருந்தாகும். கடைசியாக மார்ச் 18 அன்று நமீபியா மற்றும் பொலிவியா நாட்டிற்கு தடுப்பு மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளது. அதன் பிறகு கொரோனா தடுப்பு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படவில்லை.
இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அது மட்டுமின்றி அடுத்த மாதம் (ஏப்ரல்) முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
இதனால் உள்நாட்டில் தடுப்பூசிகளின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஏற்றுமதியை குறைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றது.
