இந்தியாவின் தடுப்பூசி செலுத்திய எண்ணிக்கை 220 கோடி - மத்திய அரசின் மைல்கல் சாதனை!
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 220 கோடியே தாண்டி இருக்கிறது.
By : Bharathi Latha
உலக அளவில் கொரோனா வைரஸ் 65 கோடிக்கு நபர்களுக்கு கூடுதல் தொற்று பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக தடுப்பூசி செலுத்தப்படாததற்கு முன்னர் இதனுடைய பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது. ஆனால் கொரோனா பரவலை முன்னிட்டு தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தது. அதன் தற்போது ஒரு பெரிய முயற்சியாக அனைவருக்கும் தடுப்பூசி, முன்னெச்சரிக்கை டோஸ் ஆகியவற்றை செலுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கோவாக்ஸின் மற்றும் கோவிட்சீல்டு தடுப்பூசிகளை நாட்டு மக்களுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஜனவரி 16ம் தேதி முதல் மத்திய அரசு மக்களுக்கு செலுத்தி வருகிறது. குறிப்பாக உலக நாடுகளுக்கு ஒரு சிறந்த உதாரணமாக இந்தியா திகழ்கிறது. ஏனெனில் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது நாடு நோய் தொற்றின் சதவீதம் கணிசமாக குறைக்கப்பட்டு பெரும் சாதனை படைக்கப்பட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு புதிய மைல்களை இந்தியா படைத்திருந்தது. தற்போது கடந்த ஜூலை 17ஆம் தேதி 200 கோடி டோஸ் செலுத்தி புதிய மைல்களை இந்தியா படைத்தது.
அந்த வகையில் தற்பொழுது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டு இருந்தார். 18 மாதங்களில் இருநூறு கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டது புதிய சாதனை என்று பிரதமர் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி முகாம்களில் போடப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கையானது இன்று 220 கோடி என்ற அளவை எட்டி இருக்கிறது. இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூர் மாண்டவியா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கூறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Maalaimalar