G20க்கு இந்தியா தலைமை ஏற்பு - நாடு முழுவதும் நிகழ்ச்சிகளுக்கு கோலாகல ஏற்பாடு!
G20 தலைமை இந்தியா ஏற்கும் வகையில் நாடு முழுவதும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அமைச்சர் தகவல்.
By : Bharathi Latha
உலகின் டாப் 20 நாடுகளின் சங்கமம் தான் இந்த G20. ஒவ்வொரு ஆண்டும் இந்த டாப் 20 நாடுகளும் சந்தித்துக் கொள்வார்கள். இந்த G20 மாநாடு எப்போதும் ஒரே இடத்தில், ஒரே நாடே நடத்தாது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில், ஒரு நாடு தலைவராக பொறுப்பேற்றுக் கொள்ளும். இந்த தலைவர் நாடு தான், அடுத்த ஆண்டுக்கான அனைத்து G20 சந்திப்புகளை நடத்த வேண்டும். இந்த தலைவர் நாடு நினைத்தால் G20-ல் உறுப்பினராக இல்லாத நாடுகளைக் கூட விருந்தாளிகளாக அழைக்கலாம். அந்த வகையில் தற்பொழுது G20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்க இருக்கிறது. வருகின்ற டிசம்பர் மாதம் இந்த பொறுப்பு இந்தியா வசம் வருகிறது என்பதும் மூலம் இந்தியர்கள் அனைவரும் பெருமை பெற வேண்டிய ஒரு விஷயம்.
ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்பை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அவர்கள் தெரிவித்து இருக்கிறார். மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்பொழுது மத்திய அமைச்சர் இது குறித்து குறிப்பிடுகையில் ஜி20 கூட்டமைப்பிற்கு இந்தியா தலைமை இருப்பது நாடு முழுவதும் கொண்டாடப்படும்.
குறிப்பாக நாடு முழுவதும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு மக்களிடையே இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இந்தியாவை உலகம் இன்னும் அதிகம் தெரிந்து கொள்வதற்கான ஒரு நல்ல பாதிப்பு இதுவாகும். ஜி20 தொடர்பான நிகழ்ச்சிகள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நாட்டின் வடகிழக்கு பிராந்தியத்தின் மேம்பாட்டுக்காக மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசும் இணைந்து பணியாற்றும். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி தீவிரமாக செயல்பட்டு வருகிறார் என்பதையும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
Input & Image courtesy: Dinamani