இலங்கைக்கு அதிக கடனை வழங்கிய நாடு இந்தியா: ஆய்வில் தகவல்!
இந்த ஆண்டு இலங்கைக்கு அதிகமான கடன்களை வழங்கிய நாடு இந்தியா ஆய்வின் தகவல்.
By : Bharathi Latha
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு பல்வேறு நாடுகள் உதவி செய்து வருகின்றன. குறிப்பாக இந்தியா, சீனா, ஜப்பான் என பல்வேறு நாடுகள் கடனுதவி வழங்கி இருக்கிறது. அத்துடன் ஆசிய வளர்ச்சி வங்கி, சர்வதேச நிதியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் உதவிக்கரம் நீட்டு வருகின்றன. இந்த கடன்கள் தொடர்பாக கொழும்பு நகரை மையமாக வைத்து இயங்கி வரும் வெட் ரிசர்ச் என்று ஆய்வு அமைப்பு இலங்கைக்கு எந்த நாடு அதிகமாக கடன் வழங்கி உள்ளது? என்பது குறித்த ஆய்வு மேற்கொண்டு உள்ளது.
இந்த அமைப்பின் முடிவுகள் தான் தற்போது வெளியாகி உள்ளது. இதில் இந்த ஆண்டில் இலங்கைக்கு அதிக கடன் வழங்கிய நாடாக இந்தியா உருமாறி வருவதாக அந்த அமைப்பு கூறி உள்ளது. இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் மட்டும் இலங்கை பெற்ற 968 பில்லியன் டாலர் வெளிநாட்டு கடல்களில் இருந்து, இந்தியா 377 பில்லியன் டாலர் வெளிநாட்டு கடல்களில் அதாவது சுமார் 2,800 கோடி வழங்கி இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவுக்கு அடுத்ததாக ஆசிய வளர்ச்சி வங்கி 360 பில்லியன் டாலர் கடன் வழங்கி இருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. கடந்த 2017 முதல் 2021 ஆம் ஆண்டுக்கு இடையிலான காலகட்டங்களில் இலங்கைக்கு அதிக கடன் வழங்கிய நாடாக சீனா இருந்துள்ளது. இதனால் இலங்கையின் பொருளாதார நெருக்கடி உச்சகட்டத்தில் இருக்கும் இந்த ஆண்டில் கடன் வழங்கிய நாடுகளில் இந்தியா முதலிடம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Maalaimalar News