இந்தியாவில் 15 ஆண்டில் 41 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் - ஐ.நா.சபை பாராட்டு!

By : Kathir Webdesk
இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் வறுமையில் இருந்து 41.5 கோடிபேர் மீண்டுள்ளனர். வறுமைக்கான குறியீடு 55.1 சதவீதத்திலிருந்து 16.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.
வறுமைக் குறைப்பில் கோவா அதிக வேகம் காட்டி வருகிறது. அதனைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர், ஆந்திர பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்கள் உள்ளன.
2015-16 கணக்கீட்டின்படி அதிக ஏழைகளைக் கொண்ட பிரிவில் 10 மாநிலங்கள் இடம்பெற்றிருந்தன. 2019-2021-ல் இந்தப் பிரிவில் இருந்து வெளியேறிய ஒரே மாநிலமாக மேற்கு வங்கம் உள்ளது. எஞ்சியுள்ள பிஹார், ஜார்க்கண்ட், மேகாலயா, ம.பி., உ.பி., அசாம், ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் அந்தப் பட்டியலில் தொடர்கின்றன.
111 நாடுகளில், 1.2 பில்லியன் மக்கள் கடுமையான வறுமையில் வாழ்கின்றனர். இவர்களில் பாதிபேர், அதாவது 593 மில்லியன் பேர் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள். இதில் அதிக எண்ணிக்கையிலான ஏழை மக்களைக்கொண்ட வளர்ந்துவரும் பகுதியாகத் துணை-சஹாரா ஆப்பிரிக்கா இருக்கிறது. அதற்கடுத்த இடத்தில் தெற்காசியா இருக்கிறது.
இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை 41.5 கோடி குறைந்திருக்கிறது. இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம் என்று இந்தியாவை, ஐ.நா பாராட்டியிருக்கிறது.
Input From: Vikadan
