எளிதான வர்த்தகத்தை நாடெங்கிலும் மேற்கொள்ளும் நாடுகள் பட்டியலில் இந்தியா அபார முன்னேற்றம்!
எளிதான வர்த்தகத்தை நாடெங்கிலும் மேற்கொள்ளும் நாடுகள் பட்டியலில் இந்தியா அபார முன்னேற்றம்!
By : Muruganandham M
மாநிலங்களில் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தும் நோக்கத்தோடு உலக வங்கியுடன் இணைந்து கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் குறிப்பிட்ட துறைகளில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றன. அந்த வகையில் மாநில சீர்திருத்தங்களுக்கான செயல் திட்ட அறிக்கை ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இதன்படி வணிக உரிமை, சுகாதாரம், திரையரங்குகள், தொலைத்தொடர்பு, சுற்றுலா உள்ளிட்ட 24 துறைகளில் எளிதான வர்த்தகத்தை மேற்கொள்ளும் வகையில் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் மாநிலங்கள் சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டது.
மாநிலங்களைத் தொடர்ந்து மாவட்ட சீர்திருத்தங்களுக்கான செயல் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. இதன்படி கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட எட்டு துறைகளில் சான்றிதழ்கள், பதிவுகள், அனுமதி போன்றவற்றின் நடைமுறையே எளிதாக்குமாறு தெரிவிக்கப்பட்டது.
அந்நிய நேரடி முதலீடு, உலகமயமாக்கலில் மிகப்பெரும் பங்கு வகிப்பதோடு, பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய உந்துசக்தியாக விளங்குகிறது. முதலீட்டாளர்களுக்கு உகந்த அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையை அரசு தொடர்ந்து வகுத்து வருகின்றது. சிவில் விமானம், பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் ஏராளமான சீர்திருத்தங்களை அரசு செயல்படுத்தியுள்ளது.