Kathir News
Begin typing your search above and press return to search.

2 DNA தடுப்பூசிகள், 1 நாசி தடுப்பூசி... 130 மேற்பட்ட நாடுகளுக்கு உதவிய ஒரே நாடு இந்தியா...

இந்தியா 2 DNA தடுப்பூசிகளையும், 1 நாசி தடுப்பூசியையும் தயாரித்துள்ளது.

2 DNA தடுப்பூசிகள், 1 நாசி தடுப்பூசி... 130 மேற்பட்ட நாடுகளுக்கு உதவிய ஒரே நாடு இந்தியா...
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  10 April 2023 2:28 AM GMT

மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஜம்முவில் தலைமை விருந்தினராக தைரோகானில் பங்கேற்ற பிரதிநிதிகளிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், கடந்த எழுபது ஆண்டுகளாக நாட்டில் கவனிக்கப்படாத 'வருமுன் காப்பதற்கான சுகாதாரப் பாதுகாப்பை முதன்முறையாக அறிமுகம் செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார். மேலும், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இரண்டு ஆண்டுகளில் இரண்டு டிஎன்ஏ தடுப்பூசிகளையும், ஒரு நாசி தடுப்பூசியையும் இந்தியா தயாரித்துள்ளது என்றார்.


அமிர்த காலத்தின் சிற்பிகளாக இளைஞர்களின் பங்கும் பொறுப்பும் அவசியம் என அமைச்சர் வலியுறுத்தினார். இளைஞர்களின் ஆற்றலும் திறனும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் முழுமையாகப் பயன்பட வேண்டும் என்று கூறினார். ஜம்மு அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் உட்சுரப்பியல் துறையுடன் இணைந்து ஜம்மு மருத்துவர்கள் அறக்கட்டளை செய்துள்ள தைரோகான் (THYROCON) மாநாட்டு முயற்சிகளை டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டினார். தைராய்டு கோளாறுகள் உள்ள நோயாளிகளின் மருத்துவ மேலாண்மையின் முன்னேற்றத்தை இத்தகைய மேம்பாடுகள் பிரதிபலிக்கும்.


தைராய்டு கோளாறுகள் இந்தியாவின் பிற பகுதிகளைப் போலவே ஜம்மு மற்றும் காஷ்மீரிலும் பொதுவான உடல்நலப் பிரச்சினை என்று அவர் குறிப்பிட்டார். 2019 ஆம் ஆண்டில் மருத்துவ அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஜம்மு மற்றும் காஷ்மீரில் தைராய்டு கோளாறுகளின் பாதிப்பு சுமார் 12.3% ஆகும், ஹைப்போ தைராய்டிசம் மிகவும் பொதுவான வகையாகும் என்று ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இந்தியாவின் மருத்துவ சுகாதார பிரச்சினைகளுக்கு உள்நாட்டு தீர்வுகளை உருவாக்க பல்வேறு இந்திய தரவுகளைப் பயன்படுத்துவது காலத்தின் தேவை என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News