இலங்கையை மோசமான நிலையில் இருந்த இந்தியா பாதுகாத்தது - இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் பாராட்டு
இலங்கையை மோசமான நிலையில் இருந்த இந்தியா பாதுகாத்தது என்று எதிர்க்கட்சித் தலைவர் பாராட்டு.
By : Bharathi Latha
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. அன்றாட உணவு கூட கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த காலகட்ட சூழ்நிலையில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இலங்கையின் கரம் கொடுத்து தாங்கி வருகின்றனர். குறிப்பாக இந்தியா சுமார் 4 பில்லியன் டாலர் அளவுக்கு கடன் வழங்கி இருக்கிறது. இந்தியாவின் இந்த உதவியினால் இலங்கை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படாமல் பாதுகாக்கப்பட்டு உள்ளதாக நாட்டின் எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜனதா விமூக்தி பிரமுனா பாராட்ட தெரிவித்து இருக்கிறார்.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்த கட்சி தலைவர் அனுராததிச, ஆறு மாதங்களில் இந்திய வழங்கிய 3.8 பில்லியன் டாலர் உதவியையும் நான்கு ஆண்டுகளில் சர்வதேச நிதியமும் வழங்கப்போகும் 2.9 பில்லியன் டாலர் உதவியுமே ஒப்பிட்டு பேசினார். மேலும் இது தொடர்பாக அவர் கூறுகையில், இலங்கை மக்களின் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாத நேரத்தில் இந்தியா மிகப்பெரிய உதவி அளித்தது. இல்லையெனில் இலங்கை இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கும் என்று தெரிவித்தார். நாட்டின் நிலைமையை தொடர்ந்து மோசம் அடைந்து வருவதாகவும் அவர் கூறினார். பின்னர் அரசுக்கு எதிராக புரிய போராட்டங்கள் நடைபெறும் என்றும் எச்சரித்து உள்ளார்.
இந்நிலையில் 2022 ஆம் ஆண்டிற்கான உலக சுற்றுலா அழகி போட்டி இலங்கையில் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. டிசம்பர் எட்டாம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெறும். இந்த போட்டியில் 80 நாடுகளை சேர்ந்த இலங்கையில் பங்கிற்கு உள்ளனர். இந்த போட்டியில் நடத்துவதற்கு இந்தியாவுடன் சுமார் 15 நாடுகள் போட்டி போட்டன. கடைசியில் அந்த வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் இலங்கையின் சுற்றுலாத்துறை மேம்படும் என்று நாட்டின் சுற்றுலா அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Input & Image courtesy: News