சூரிய மின் சக்தி மாற்றத்தை நோக்கி இந்தியா: பிரதமரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி!
சூரிய மின்சக்தி உற்பத்தினால் இந்தியாவின் எரிபொருள் செலவு 34,000 கோடி சேமிப்பு.
By : Bharathi Latha
எரிசக்தி அமைப்பின் எம்பர் நிறுவனம் தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. இதில் கடந்த 10 ஆண்டுகளில் சூரிய மின்சக்தியின் வளர்ச்சி அதிகரித்து உள்ளது. சூரிய மின்சக்தி உற்பத்தி அதிகமாக உள்ள முதல் 10 நாடுகளில் ஐந்து நாடுகள் ஆசிய கண்டத்தில் உள்ளன. இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா வியட்நாம் ஆகியவையில் அந்த நாடுகள்.
இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகளில் சூரிய மின்சக்தி உற்பத்தி காரணமாக கடந்து ஜனவரி மாதம் ஜூன் மாதம் வரை எரிபொருள் செலவில் மொத்தம் 34 பில்லியன் டாலர் சேமிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை மேற்கண்ட நாடுகளில் செலவான மூத்த எரிபொருள் செலவில் ஒன்பது சதவீதமாகும். இவற்றில் சீன அதிகமான தொகையை சேமித்து இருக்கிறது. 2100 கோடி டாலர் சேமிப்பை சேமித்து இருக்கிறது.
இந்நாட்டின் மின்சார உற்பத்தி தேவை 5% சூரிய மின்சக்தியினால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக ஜப்பான் 560 கோடி டாலர் எரிபொருளை சேமித்து உள்ளது. மூன்றாவது இடத்தில் இந்தியா பொழுது மேற்கண்ட ஆறு மாதங்களில் சூரிய மின்சக்தி உற்பத்தி மூலம் இந்திய எரிபொருள் செலவில் 4.2 பில்லியன் டாலர் சேமித்துள்ளது. அதாவது ஒரு கொடியை 94 லட்சம் டன் நிலக்கரியின் சேமிப்பு பயன்பாடு சேமிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிலக்கரி தட்டுப்பாடு நடைபெறும் நிலையில் இதனை பயன்படுத்துவது தான் நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், பிரதமரின் தீவிர முயற்சியின் காரணமாக சூரிய மின்சக்தி உற்பத்தையினை முக்கியத்துவத்தை நாடு உணர தொடங்கி இருக்கிறது.
Input & Image courtesy: Hindu News