Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்திற்கு கீழ் சென்றது.!

கொரோனா பரவல், இறப்பு, சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை சரிவை சந்தித்து வருவதால் பொதுமக்கள் மட்டுமின்றி மருத்துவர்களும் நிம்மதிப்பெருமூச்சு விடுகின்றனர்.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்திற்கு கீழ் சென்றது.!
X

ThangaveluBy : Thangavelu

  |  5 July 2021 11:38 AM IST

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தினசரி பாதிப்பாக 40 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. நாடு முழுவதும் தினமும் புதிய உச்சங்களைத் தொட்டு மக்களை மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை, தற்போது தினமும் குறைந்து வருகிறது.

கொரோனா பரவல், இறப்பு, சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை சரிவை சந்தித்து வருவதால் பொதுமக்கள் மட்டுமின்றி மருத்துவர்களும் நிம்மதிப்பெருமூச்சு விடுகின்றனர்.

இந்நிலையில், நேற்றை கொரோனா தொற்று 43,071 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில், இன்று தொற்று பாதிப்பு மேலும் சரிந்துள்ளது. அதன்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 39,796 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 42,352 பேர் குணமடைந்துள்ளனர். தொடர்ந்து 53வது நாளாக தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 82 ஆயிரத்து 071 ஆக குறைந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News