மனித உரிமை கவுன்சிலில் தவறாக நடந்த பாகிஸ்தான்: இந்தியா கடும் கண்டனம்?
ஐக்கிய நாட்டு சபை மனித உரிமை கவுன்சிலில் தவறாக பேசிய பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது.
By : Bharathi Latha
ஐக்கிய நாட்டு மனித உரிமை கவுன்சிலில் பாகிஸ்தான் தவறுதலாக கருத்துக்களை பதிவு செய்து கொண்டிருக்கிறது. இது குறித்து இந்தியா தன்னுடைய கண்டனத்தை தெரிவித்து இருக்கிறது. சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் உள்ள ஐக்கிய நாட்டு சபை மனித உரிமை கவுன்சில் கூட்டத்தின் போது பாகிஸ்தான் இந்தியாவைப் பற்றி தவறாக பேசியது. இதற்கு இந்தியா தன்னுடைய பதிலை கொடுத்து இருக்கிறது. இதை ஒட்டி ஐக்கிய நாடு மனித உரிமை கவுன்சிலின் இந்திய தூதர் மற்றும் முதன்மை செயலாளர் சீமா பேசினார். அப்பொழுது அவர் கூறுகையில் பாகிஸ்தான் பிரதிநிதி இந்தியாவிற்கு எதிராக தவறான பிரச்சாரத்தை செய்வதற்கு மீண்டும் இந்த சிறப்பான மன்றத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார்கள்.
குறிப்பாக ஐக்கிய நாட்டு பாதுகாப்பு கவுன்சில் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் புகலிடம் கொடுக்கப்படும் இடமாக பாகிஸ்தான் திகழ்ந்து வருகிறது. மற்ற நாடுகள் தீவிரவாதத்தை எதிர்க்கும் ஒரு சூழ்நிலையில் பாகிஸ்தான் மட்டும் தனித்துவமாக வேறுபட்டு தீவிரவாதத்திற்கு புகலிடம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. சர்வதேச பயங்கரவாதி என ஐக்கிய நாட்டு சபையால் தடை செய்யப்பட்டிருந்த ஒசாமா பின்லேடன் பாகிஸ்தான் ராணுவ அகாடமி அருகே தான் வாழ்ந்தார்.
சர்வதேச பயங்கரவாதிகள் ஆன மஸ்ஜித், சையத் ஆகியோர் பல்லாண்டு காலமாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைப்புகளாக தான் வளர்த்து விட்டது. மேலும் அவர்களுக்கு புகழிடம் தந்து இருக்கிறது. எனவே இந்தியாவை தவறாக பிரதிபலிப்பதற்கு ஒருபோதும் பாகிஸ்தான் தகுதி இல்லை என்று அவர் தன்னுடைய கண்டனத்தை இந்தியாவின் தரப்பில் தெரிவித்து இருக்கிறார்.
Input & Image courtesy: Dinamani