Begin typing your search above and press return to search.
கப்பலை தாக்கி அழிக்கும் ‘பிரமோஸ்’ ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்த இந்தியா.!
கப்பலை தாக்கி அழிக்கும் ‘பிரமோஸ்’ ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்த இந்தியா.!

By :
கப்பலை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட பிரமோஸ் சூப்பர் சானிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இதனால் நமது படை கூடுதலாக வலுப்பெற்றுள்ளது. ரஷ்யா நாட்டுடன் இணைந்து நிலம், விமானம், கப்பல், நீர்மூழ்கி கப்பல் ஆகியவற்றில் இருந்து ஏவக்கூடிய, ‘பிரமோஸ்’ ஏவுகணையை நாம் உருவாக்கி வருகின்றோம். ஒலியை விட மூன்று மடங்கு அதிக வேகம் மற்றும் செயல் திறன் உடைய இந்த ஏவுகணைகளின் சோதனைகள் தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்நிலையில், வங்காள விரிகுடா கடற்பகுதியில், நமது கடற்படையினர் பிரமோஸ் ஏவுகணை சோதனையை நேற்று வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். சோதனைக்காக கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய கப்பல் ஒன்றை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story