Kathir News
Begin typing your search above and press return to search.

G20 பொறுப்பை தொடர்ந்து இந்தியாவுக்கு மற்றொரு மகுடம்: இரண்டாவது தலைமை பொறுப்பு!

ஆசியான்-பசிபிக் அஞ்சல் ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்கிறது.

G20 பொறுப்பை தொடர்ந்து இந்தியாவுக்கு மற்றொரு மகுடம்: இரண்டாவது தலைமை பொறுப்பு!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  5 Jan 2023 9:35 AM IST

தாய்லாந்தின் பாங்காக்கை தலைமையிடமாகக் கொண்ட ஆசியான்-பசிபிக் அஞ்சல் ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பை இந்தியா இம்மாதத்தில் ஏற்றுக்கொள்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை பாங்காங்கில் நடைபெற்ற 13-வது ஆசியன் பசிபிக் அஞ்சல் துறை மாநாட்டில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, அஞ்சலக சேவைகள் வாரியத்தின் முன்னாள் உறுப்பினர் டாக்டர் வினயா பிரகாஷ் சிங் ஒன்றியத்தின் தலைமை செயலாளராக 4 ஆண்டுகளுக்கு பொறுப்பு வகிப்பார்.


ஆசியான்-பசிபிக் பிராந்தியத்தை சேர்ந்த 32 நாடுகள் பங்கேற்றுள்ள அமைப்பாக திகழும் அப்பு, இந்தப் பிராந்தியத்துக்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும். உறுப்பு நாடுகளுக்கு இடையே அஞ்சலகம் தொடர்பான உறவுகளை மேம்படுத்துவதும் அஞ்சல் சேவைகளில் ஒத்துழைப்பை வழங்குவதும் இதன் நோக்கமாகும்.


ஆசியா-பசிபிக் பிராந்தியத்தின் அஞ்சலக சேவைகளில் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதே எனவே நோக்கமாகும் என்று டாக்டர் வினயா பிரகாஷ் சிங் கூறியுள்ளார். ஏற்கனவே இந்தியா தற்போது ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை டிசம்பர் மாதம் ஏற்றுக்கொண்டது அதனைத் தொடர்ந்து தற்பொழுது ஜனவரி மாதம் ஆசியான் பசுபிக் அஞ்சல் ஒன்றியத்தின் தலைமை பொறுப்பையும் தற்போது ஏற்க இருக்கிறது.

Input & Image courtesy: PIB

Next Story
கதிர் தொகுப்பு
Trending News