2021 இல் நன்மதிப்பு கொண்ட உலகின் வலிமையான நாடாக இந்தியா விளங்கும்.!
2021 இல் நன்மதிப்பு கொண்ட உலகின் வலிமையான நாடாக இந்தியா விளங்கும்.!

"என் நாட்டின் இளைஞர்களுக்கு ‘என்னால் முடியும்’ என்ற அணுகுமுறையும், ‘நான் கண்டிப்பாக செய்வேன்’ எனும் நம்பிக்கையும் இருப்பதால் நான் அவ்வாறு உணர்கிறேன். எந்த சவாலும் அவர்களுக்கு பெரிதாக இல்லை. அவர்களால் அடைய முடியாதது எதுவும் இல்லை" என்று மோடி கூறினார். மான் கி பாத் உரையில் பேசிய மோடி, கால் பாதிப்படைந்த தனது வளர்ப்பு நாய்க்கு நடை வண்டி தயாரித்த கோவை சிறுமி காயத்ரிக்கு பாராட்டுத் தெரிவித்தார்.
சிங்கங்கள், புலிகள் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, வனப்பகுதியிலும் கணிசமான அதிகரிப்பை இந்தியா கண்டுள்ளது என்றும் பிரதமர் கூறினார். "முக்கிய காரணம் என்னவென்றால், அரசு மட்டுமல்ல, பல மக்கள், சிவில் சமூகங்கள் மற்றும் பிற அமைப்புகளும் வன மற்றும் வனவிலங்கு உரையாடலுக்கு பங்களிப்பு செய்கின்றன" என்று பிரதமர் மோடி கூறினார்.
தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மான் கி பாத்தின் 71’வது பதிப்பில், பிரதமர் மோடி வலுவான, துடிப்பான மற்றும் சுறுசுறுப்பான முன்னாள் மாணவர் வலையமைப்பை வலியுறுத்தினார். மேலும் கல்வி நிறுவனங்களை புதுமையான முறைகளைப் பின்பற்றவும், பழைய மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவதற்கான ஆக்கபூர்வமான தளங்களை உருவாக்கவும் வலியுறுத்தினார்.
"2021 இல் இந்தியா உலக அளவில் பல புதிய உயரங்களை எட்ட வேண்டும். மேலும் இந்தியா உலக அளவில் நன்மதிப்பு கொண்ட வலிமையான நாடாக திகழ வேண்டும். இதை எட்ட தற்சார்பு கொண்ட இந்தியாவை உருவாக்குவது அவசியம். அனைவரும், இந்தியாவில் இந்தியர்களின் உழைப்பினால் உருவான இந்தியப் பொருட்களையே பயன்படுத்த உறுதியேற்க வேண்டும்" என மோடிமேலும் கூறினார்.