தொழில்நுட்ப உதவியுடன் இந்தியா வளர்கிறது: வெளியுறவுத்துறை அமைச்சர்!
தொழில்நுட்ப உதவியுடன் இந்தியா வளர்கிறது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு.
By : Bharathi Latha
இந்தியாவின் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சர்வதேச தொழில் நுட்ப மாநாடு புதுடெல்லியில் நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சகம் இணைந்து நடத்துவதன் காரணமாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்பொழுது தகவல் தொழில்நுட்பத்தின் புவிசார் அரசியல் என்னும் கருப்பொருளில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு அவர் கூறுகையில், தொழில்நுட்பம் வளர்ந்தால்தான் இந்திய வளரும். இந்த விஷயத்தில் சில முக்கியமான கேள்விகள் இருக்கின்றன. முக்கியத்துவம் வாய்ந்த நமது தகவல்கள் இங்கே இருக்கின்றன. அவற்றை யார் சேகரிக்கிறார்கள்? பராமரிக்கிறார்கள்? அந்த தகவல்களைக் கொண்டு அவர்கள் என்ன செய்கிறார்கள்? இதுபோன்ற முக்கியமான கேள்விகள் விஷயத்தில் பதிலை குறிப்பாக கடந்த ஆண்டுகளாக தான் நாம் வெளிப்படைந்து இருக்கிறோம்.
இன்றைய புவிசார் அரசியலில் தொழில்நுட்பம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது. கடந்த காலங்களில் கூட இப்படித்தான் இருந்தது என்று சிலர் வாதம் செய்யலாம். ஆனால் அணு ஆயுதம், இணையம், விண்வெளி உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காலம் கடந்த காலங்களில் ஏற்பட்ட போது இது போன்று பேசப்பட்டு இருக்கலாம்.
தற்பொழுது இந்தியா வளர்ந்து வருகிறது. தொழில் நுட்பத்தின் உதவியுடன் பல்வேறு மாற்றங்கள் இந்தியாவில் நிகழ்ந்து இருக்கின்றன. இந்தியாவின் அரசியல் தொழில்நுட்பத்துடன் பின்னிப்பிணைந்து இருக்கிறது. இதுதான் புதிய எரிபொருள், தொழில்நுட்பம் நடுநிலையானது. பொருளாதாரமோ அல்லது பிற விஷயங்கள் கூட இந்த அளவிற்கு நடுநிலையானவை அல்ல என்று அவர் கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: Hindu News