Kathir News
Begin typing your search above and press return to search.

ஆக்சிஜன் லாரிகளை எடுத்து செல்வதற்கு தயாரான இந்திய விமானப்படை: மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ளது.

ஆக்சிஜன் லாரிகளை எடுத்து செல்வதற்கு தயாரான இந்திய விமானப்படை: மத்திய அரசு அதிரடி உத்தரவு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  23 April 2021 4:26 PM IST

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ளது. இதனால் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே சமயத்தில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.





இதனால் பல்வேறு மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலமாக ஆக்சிஜன் எடுத்து செல்வது காலத்தாமதாம் ஆகியுள்ளது. இதனை கருத்தில் கொண்ட மத்திய அரசு விமானப்படை மற்றும் இந்திய ரயில்வே களம் இறக்கியுள்ளது. அந்த வகையில், இந்திய விமானப்படை தனது சி -17 மற்றும் ஐ.எல் -76 விமானங்களை ஆக்சிஜன் டேங்கர் லாரிகளை எடுத்து செல்வதற்கு வழங்கியுள்ளது. இதனால் குறைந்த நேரத்தில் பல்வேறு நகரங்களுக்கு எளிதில் எடுத்து செல்ல முடியும்.





பெருந்தொற்றை எதிர்த்து போராடுவதற்கு அரசாங்கத்திற்கு உதவுவதற்காக விமானப்படை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை ஐ.ஏ.எஃப் ஏற்கனவே விமானத்தில் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News