அருணாச்சல பிரதேச எல்லையில் முக்கிய பகுதிகளை கைப்பற்றிய இந்திய இராணுவம்.. சீனாவின் முயற்சிக்கு பதிலடி.!
அருணாச்சல பிரதேச எல்லையில் முக்கிய பகுதிகளை கைப்பற்றிய இந்திய இராணுவம்.. சீனாவின் முயற்சிக்கு பதிலடி.!
By : Muruganandham M
எல்லை கட்டுப்பாட்டு வரிசையில் (எல்ஐசி) சீன ஊடுருவலைத் தடுக்க, பாதுகாப்பு அமைச்சகம் அருணாச்சல பிரதேசத்தில் முக்கிய பகுதிகளை கையகப்படுத்தியுள்ளது.
மேற்கு சியாங் மாவட்டத்தில் உள்ள யோர்னி II கிராமத்தில் இந்த நிலப்பகுதி அமைந்துள்ளது. அங்கு ஒரு இராணுவ காரிஸனை நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. யோர்னி II எல்.ஐ.சியில் இருந்து 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சுமார் 150 மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. இந்திய கிராமத்தில் வரும் காரிஸன், நிங்சியில் சீன உள்கட்டமைப்பு நடவடிக்கை மேற்கொண்டதற்கு பதிலடியாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.
உளவுத்துறை ஆய்வாளர் 'டெட்ரெஸ்ஃபா' இந்திய நிலையை சிறப்பிக்கும் ஒரு படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
Amid the border tension with #China, the #IndianArmy has acquired strategic land 30 km from the border in #ArunachalPradesh to establish a military garrison, data from local media suggests the suspected site as below, possibly countering the infra build up in Nyingchi pic.twitter.com/BjTanE07vr
— d-atis☠️ (@detresfa_) January 30, 2021
"சீனாவுடனான எல்லை பதட்டத்தின் மத்தியில், அருணாச்சல பிரதேசத்தில் ஒரு இராணுவ காரிஸனை நிறுவுவதற்காக இந்திய இராணுவம் எல்லையில் இருந்து 30 கி.மீ தூரத்தில் முக்கிய பகுதியை கையகப்படுத்தியுள்ளது, உள்ளூர் ஊடகங்களின் தரவுகள் சந்தேகத்திற்கிடமான தளத்தை குறிப்பிடுகின்றன, இது நிங்சியில் உள்ள கட்டமைப்பை எதிர்கொள்ளும், ”என்றார் டெட்ரெஸ்ஃபா.
எல்.ஏ.ஆர்.ஆர் சட்டம், 2013ன் கீழ் ஒரு கிராம சபைக் கூட்டத்தின் தேவை இல்லாமல் பாதுகாப்பு நோக்கங்களுக்காக, ரயில்வே மற்றும் தகவல்தொடர்புக்காக எந்தவொரு நிலத்தையும் கையகப்படுத்த மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.
2018 ஆம் ஆண்டில், தவாங் மாவட்டத்தில் உள்ள போம்ஜா கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொருவரும் இந்திய ராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு பெற்றனர்.
ஒரு கிராமவாசி கூட ஒரு கோடிக்கு குறைவாக பெறவில்லை. முதல்வர் பெமா காண்டு 31 நில உரிமையாளர்களுக்கு கிட்டத்தட்ட ரூ .41 கோடி இழப்பீடு வழங்கினார். தவாங் கேரிசனின் முக்கிய இருப்பிடத் திட்ட அலகுகளுக்கு 200.056 ஏக்கர் நிலங்களை இந்திய ராணுவம் கையகப்படுத்தியது. அருணாச்சல பிரதேசத்தில் மூன்று கிராமங்களைச் சேர்ந்த 152 குடும்பங்களுக்கு 2017 ல் பாதுகாப்பு அமைச்சகம் ரூ .54 கோடியை வெளியிட்டிருந்தது.