Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய ராணுவ தலைமை தளபதி எச்சரிக்கை: இந்தியா- சீனா இடையே நடந்த பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது.!

இந்திய ராணுவ தலைமை தளபதி எச்சரிக்கை: இந்தியா- சீனா இடையே நடந்த பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது.!

இந்திய ராணுவ தலைமை தளபதி எச்சரிக்கை: இந்தியா- சீனா இடையே நடந்த பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது.!

Rama SubbaiahBy : Rama Subbaiah

  |  8 Nov 2020 5:00 PM GMT

லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சென்ற ஜூன் மாதம் சீனாவின் எல்லை அத்துமீறலை அடுத்து இது குறித்து விசாரிக்க சென்ற இந்திய படையினர் 20 பேரை சீனப் படையினர் கோழைத்தனமாக கல்லாலும், இரும்பு ராடுகளாலும் தாக்கி நம் படையினர் 20 பேரை கொடூரமாக கொன்றனர்.

இதனால் இந்தியா எடுத்த அதே பாணி நடவடிக்கையால் 40 க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் கொல்லப்பட்டனர் என பன்னாட்டு ஊடகங்கள் கூறின. இந்நிலையில் ஆத்திரம் அடைந்த சீனா ஏராளமான படையினரைக் குவித்தமையினால் பதிலுக்கு இந்தியாவும் எல்லையில் ஏராளமான படைகளை குவித்துள்ளது.

இவற்றில் சீனாவை அச்சுறுத்தும் ரபேல் விமானங்கள் மற்றும் சக்தி வாய்ந்த நவீன ஏவுகணைகளும் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் இந்தியா, ஆஸ்திரேலியா உள்பட வலிமை மிக்க நாடுகளை கைகோர்த்துக் கொண்டு தற்போது தனது கடற்படை வலிமையை காட்டும் விதத்தில் வங்கக் கடலில் மலபார் கடற்பயிற்சிகளை செய்து வருகிறது.

இதை அடுத்து, எழுந்த பதற்றத்தைத் தணிக்க,சென்ற வெள்ளிக்கிழமை எட்டாம் சுற்றுப்பேச்சுவார்த்தைக்கு சுசுல் என்னுமிடத்தில் இருநாட்டு இராணுவ அதிகாரிகளுக்கு இடையில் பேச்சு நடைபெற்றது. குறித்த பேச்சுவார்த்தை எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில், இந்தியாவின் இராணுவ தலைமை தளபதி ராவத் சமீபத்தில் பேசுகையில் சீனா மீண்டும் வம்புக்கு வந்தால் அந்த நாட்டை சும்மாக விடமாட்டோம் என்று கூறினார்.

மேலும், லடாக் பகுதியில் குவிக்கப்பட்ட படைகள் அனைத்தையும் சீனா உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார். மேலும், மே மாதத்திற்கு முந்தைய நிலைப்பாட்டை எல்லைக்கு கொண்டு வந்தால்தான் அமைதியும் பரஸ்பர நம்பிக்கையும் சாத்தியமாகும் என அவர் கண்டிப்புடன் கூறினார்.
இந்நிலையில் ஒன்பதாம் கட்ட சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும், அப்போது முக்கிய விஷயங்களில் தீர்வு காண தயாராக இருப்பதாக சீனா இப்போது கூறியுள்ளது. இந்த நிலையில் , இரு நாட்டு இராணுவ அதிகாரிகளும் 9- ம்கட்ட பேச்சு வார்த்தைக்கு ஒப்புக்கொண்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News