இந்திய ஏவுகணைகளை கண்காணிக்கும் முயற்சி: சீனா உளவு கப்பலை அனுப்பியதா?
இந்திய பெருங்கடலுக்குள் நுழைந்த சீன உளவு கப்பல் இந்திய ஏவுகணைகளை கண்காணிக்கும் முயற்சி காரணமா?
By : Bharathi Latha
அடுத்த வாரம் இந்தியா நீண்ட தூர ஏவுகணை சோதனை நடத்தப் போவதாக அறிவித்து இருந்தது. இந்த நிலையில் இதனை கண்காணிக்கும் நோக்கில் இந்திய பெருங்கடல் பகுதிக்குள் ஒரு உளவு கப்பல் ஒன்றை சீன அனுப்பி வைத்ததாக அவர்கள் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அண்டை நாடான சீனாவின் யுவான் வாங் 5 என்ற உலக கப்பல் இன்னொரு அண்டை நாடான இலங்கை துறைமுகத்தில் முகாமிட்டு இருந்தது. சில நாட்கள் கழித்து அந்த கப்பல் அங்கிருந்து புறப்பட்ட சென்றது.
இந்நிலையில் ஒடிசா மாநிலம் அப்துல் கலாம் தீவிலிருந்து நவம்பர் 10, 11-ம் தேதிகளில் நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை சோதனை நடத்தப் போவதாக இந்தியா அறிவித்தது. இந்த ஏவுகணை 2000 km தொலைவில் உள்ள இலக்கை தாக்கக்கூடியது. இதை எடுத்து இந்த தொலைவில் உள்ள பகுதிக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீனாவிற்கு சொந்தமான யுவான் வாங் சிக்ஸ் என்ற உளவு கப்பல் இந்திய பெருங்கடலுக்குள் நுழைத்ததாகவும் அடுத்த சில நாட்களுக்கு பாலி கடற்பகுதியில் அந்த கப்பல் முகாமிட்ட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த உளவு கப்பலின் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள்களை கண்காணிக்கும் வகையிலான நவீன தொழில்நுட்பங்கள் ஏற்கனவே இருக்கின்றன. சீனக் கப்பல் இந்திய பெருங்கடல் நுழைந்ததை கப்பல்களின் போக்குவரத்தை கண்காணிக்கும் சர்வதேச நிறுவனமான டிராபிக் உறுதி செய்து உள்ளது. இது குறித்து பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகையில், ஏவுகணையின் செயல் திறன் அதன் தொழில்நுட்பம் துள்ளியமாக வேகம் ஆகியவற்றை சீன உளவு கப்பலால் எளிதாக கண்காணிக்க முடியும். சீனாவின் இந்த அத்துமீறல் மத்திய அரசுக்கு தலைவலியை ஏற்படுத்த உள்ளது என்றும் கூறப்பட்டிருக்கிறது.
Input & Image courtesy: Dinamalar News