Kathir News
Begin typing your search above and press return to search.

பாகிஸ்தான் உளவுத்துறையின் நூதன முயற்சி - எச்சரிக்கும் இந்திய உளவுத் துறை.!

பாகிஸ்தான் உளவுத்துறையின் நூதன முயற்சி - எச்சரிக்கும் இந்திய உளவுத் துறை.!

பாகிஸ்தான் உளவுத்துறையின் நூதன முயற்சி - எச்சரிக்கும் இந்திய உளவுத் துறை.!

Saffron MomBy : Saffron Mom

  |  2 Jan 2021 6:30 AM GMT

பாகிஸ்தான் உளவாளிகள் இந்திய ராணுவ ஜவான்களை தொலைபேசி வாயிலாக அழைப்பதன் மூலம் முக்கியமான பல தகவல்களை சேகரிக்க முயற்சிக்கலாம் என்று உளவுத் துறை நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன என ANI செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒரு மூத்த அதிகாரியின் கூற்றுப்படி, பாகிஸ்தான் உளவாளிகள் இந்திய கட்டுப்பாட்டு அறைகள், அலுவலகங்களுக்கு தொலைபேசி வாயிலாக அழைத்துப் பின்னர், படையின் மூத்த அதிகாரிகள் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு தகவல்களை சேகரிக்க முயற்சிக்கலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் மூலம் இந்தியப் படைகளின் இயக்கம், VIVIP க்களின் நடமாட்டம், முக்கிய இராணுவ தளத்தின் இடங்கள் ஆகியவற்றை குறித்த தகவல்கள் சேகரிக்க இது ஒரு புதிய வழிமுறை என்று உளவுத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதனடிப்படையில் பாகிஸ்தானின் இந்த வலையில் யாரும் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று நம் பாதுகாப்பு படையின் அனைத்து அலுவலகங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புலனாய்வு அதிகாரிகள் கூற்றுப்படி, மற்ற ஏஜென்சிகள் மூலம் பெற்ற தகவல்களை கொண்டு இந்த புதிய எச்சரிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி வாயிலாக அழைப்பவரின் அடையாளத்தை உறுதி செய்து கொள்ளாமல் ஊழியர்கள் எந்த தகவல்களையும் வழங்க வேண்டாம் என்றும், பாகிஸ்தான் உளவுத் துறையினரும் சமீபத்திய இத்தகைய செயல்பாடுகளை தோல்வி அடைய வைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரிகள், சமூக வலைத்தளங்களில் இந்திய ராணுவத்தினருக்கு போலி அடையாளத்தில், நண்பர்கள் கோரிக்கைகளை அனுப்பி பல தகவல்களை சேகரிக்க முயற்சிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதன் ஆபத்துகளைப் பற்றி படையினருக்கு விளக்கமாகக் கூறி, தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து இதன் மூலம் எந்த ரகசியங்களும் கசிந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பாதுகாப்பு அமைப்பிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News