Kathir News
Begin typing your search above and press return to search.

விபத்தில் இறந்த MiG-29K விமானி நிஷாந்த் சிங் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய இந்தியக் கடற்படை.!

விபத்தில் இறந்த MiG-29K விமானி நிஷாந்த் சிங் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய இந்தியக் கடற்படை.!

விபத்தில் இறந்த MiG-29K விமானி நிஷாந்த் சிங் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய இந்தியக் கடற்படை.!

Saffron MomBy : Saffron Mom

  |  12 Dec 2020 2:26 PM GMT

நவம்பர் 6 ஆம் தேதி கோவா கடற்பகுதியில் நடந்த MiG-29K விபத்தில் உயிரிழந்த போர் விமானி கமாண்டர் நிஷாந்த் சிங்கு உரிய இராணுவ மரியாதை உடன் அவரது உடலுக்கு இந்திய இராணுவ கடற்படை இறுதி மரியாதை செலுத்தியது.

"நவம்பர் 26 இல் கோவா கடற்பகுதியில் நடந்த MiG-29K விபத்தில் கமாண்டர் நிஷாந்த் உயிர்பிழைக்க முடியவில்லை. அவரது மனைவி நயீப் ரந்தவா தேசியக் கொடியையும் மற்றும் அவரது கணவரின் சீருடையையும் அதிகாரிகளிடம் இருந்து பெற்றுக்கொண்டார்," என்று கடற்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

கடற்படை அதிகாரியின் மகனான கமாண்டர் நிஷாந்த் சிங், கிரண், ஹாவ்க் மற்றும் MiG-29K போன்ற போர் விமானங்களுக்குத் தகுதி பெற்ற விமானி ஆவார். "இந்தியக் கடற்படை தனது சிறந்த விமானிகளுக்குள் ஒருவரான கமாண்டர் நிஷாந்த் சிங்கை இழந்துள்ளது, மேலும் இவர் அமெரிக்கக் கடற்படையில் இருந்து மேம்பட்ட ஸ்ட்ரைக் பயிற்சியையும் பெற்றுள்ளார்," என்று அதிகாரி தெரிவித்தார். மேலும் நிஷாந்த், மலையேறுவது மற்றும் படகு வீரர் போன்ற திறமைகளிலும் தகுதி பெற்றவர் என்றும் அதிகாரி குறிப்பிட்டார்.

ரஷ்ய ஜெட் விமானம் INS விக்ரமாத்தியாவில் இருந்து புறப்பட்டு, நவம்பர் 26 இல் மாலை 5 அளவில் கோவா கடலில் இருந்து அரபிக் கடலில் மோதியது. சம்பவம் நடந்தவுடனே மற்றொரு விமானி மீட்கப்பட்டார். கமாண்டர் நிஷாந்த் சிங் உடல் இந்த வாரத் தொடக்கத்தில் மீட்கப்பட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News