Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய அமைதி சீர்குலையனும்! பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இஸ்லாமிய அமைப்புக்கு 3 மாதத்துக்குள் ரூ. 100 கோடி பரிமாற்றம்!

இந்திய அமைதி சீர்குலையனும்! பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இஸ்லாமிய அமைப்புக்கு 3 மாதத்துக்குள் ரூ. 100 கோடி பரிமாற்றம்!

இந்திய அமைதி சீர்குலையனும்! பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இஸ்லாமிய அமைப்புக்கு 3 மாதத்துக்குள் ரூ. 100 கோடி பரிமாற்றம்!
X

Muruganandham MBy : Muruganandham M

  |  26 Dec 2020 12:45 PM IST

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை கேரளாவில் இயங்கி வரும் பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு 100 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு இந்தியாவில் பல மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த கட்சியின் செயல்பாடு, சட்டவிரோதமாக இருப்பதாக கேரள அரசு குற்றம் சாட்டி வருகிறது.

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சியின் வளர்ச்சி மற்றும் நடவடிக்கை குறித்து மூத்த பாதுகாப்பு துறை அதிகாரிகள் பட்டியலிட்டதோடு, அந்த அமைப்பை தடை செய்வதே நல்லது என்ற கருத்தையும் அவர் முன் வைத்தானர்.

தொடர்ந்து, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சியின் செயல்பாடுகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வந்தது. பப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சட்ட விரோத அமைப்பு என்றும் அறிவிக்க தேவையான ஆதாரங்களும் மத்திய பாதுகாப்பு துறை தரப்பில் சேகரிக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் கேரளாவில் சில நாள்களுக்கு முன் பாப்புலர் இந்தியா அமைப்பின் துணை அமைப்பான கேம்பஸ் பிரன்ட் அமைப்பின் அமைப்பின் தேசிய செயலாளர் ரவூஃப் ஷெரீப் என்பவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து 2020 பிப்ரவரி மாதத்துக்குள் பாப்புலர் பிரன்ட் அமைப்பின் வங்கிக்கணக்குக்கு ரூ.100 கோடி பணம் வந்துள்ளது. இந்த பணம் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தூண்டப்பட்ட போராட்டத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக சந்தேகம் இருப்பதாகவும், ஹத்ராஸில் கலவரம் ஏற்படுத்த திட்டமிட்டிருத்தாகவும் தெரியவந்துள்ளது.

டிசம்பர் 3 ஆம் தேதி பாப்லர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான டெல்லி, சென்னை, திருவனந்தபுரம் , மதுரை, தென்காசி, மலப்புரம், கொச்சி உள்ளிட்ட 26 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News