15,000 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் வினியோகம்.. இந்திய ரயில்வே சாதனை.!
‘ஆக்சிஜன்’ பற்றாக்குறையை போக்க 15,000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் திரவங்களை இந்தியன் ரயில்வே மூலமாக நாட்டில் உள்ள அனைத்து இடங்களுக்கும் தங்குத்தடையின்றி வினியோகம் செய்து சாதனை படைத்துள்ளது.

By : Thangavelu
'ஆக்சிஜன்' பற்றாக்குறையை போக்க 15,000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் திரவங்களை இந்தியன் ரயில்வே மூலமாக நாட்டில் உள்ள அனைத்து இடங்களுக்கும் தங்குத்தடையின்றி வினியோகம் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை காரணமாக, பல லட்சம் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனை போக்குவதற்காக பிரதமர் மோடி, ரயில்வே மற்றும் விமானப்படையை களத்தில் இறக்கினார்.
இதனை தொடர்ந்து நாட்டில் உள்ள அனைத்து மூளை, முடுக்கெல்லாம் ரயில்வே மற்றும் விமானப்படை மூலமாக ஆக்சிஜன் திரவம் வினியோகம் செய்யப்பட்டது. அந்த வகையில் இந்திய ரயில்வே எக்ஸ்பிரஸ் மூலமாக 15 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் திரவம் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய ரயில்வே கூறியதாவது: பல்வேறு தடைகளை கடந்து, பல மாநிலங்களுக்கு இந்திய ரயில்வே தொடர்ந்து திரவ மருத்துவ ஆக்சிஜனை வினியோகம் செய்து வருகிறது. இதுவரை, அனைத்து மாநிலங்களுக்கு 936 டேங்கர்களில், 15,284 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை நாடு முழுவதும் 234 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலமாக வெற்றிகரமாக ஆக்சிஜன் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. ஆக்சிஜன் தேவைகளை பூர்த்தி செய்ய தொடர்ந்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் என இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
