இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ட்ரோன்: சுட்டு வீழ்த்திய மகளிர் பாதுகாப்பு படையினர்!
இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ட்ரோனை மகளிர் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தி இருக்கிறார்கள்.
By : Bharathi Latha
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லையில் இருந்த இந்திய பகுதிக்குள் நுழைந்த ஆளில்லா விமானத்தை மகளிர் பாதுகாப்பு படையினர் சுட்டு விரட்டி இருக்கின்றார்கள். திங்கட்கிழமை இரவு 11.05 மணியளவில் அமிர்தசரஸ் வடக்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜாகார்பூர் கிராமத்திற்கு அருகில் இந்திய எல்லையில் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.
அப்பொழுது பாகிஸ்தான் பகுதியிலிருந்து வந்த ஆளில்லா விமானம் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பொழுது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மகளிர் படையினர் அதை சுட்டு வீழ்த்தி இருக்கிறார்கள். ரோந்து நடவடிக்கையின்போது, ஆறு ரெக்கைகள் கொண்ட செய்தமடைந்த ஆளில்லா விமானம் பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்டு இருக்கிறது.
18 கிலோ இடை கொண்ட இந்த விமானத்தில் 3.11 கிலோ போதை பொருட்கள் இருந்ததாகவும், அதன் அடியில் இணைக்கப்பட்டிருந்த வெள்ளை பாலீதீனில் சுற்றப்பட்டு இருந்ததாகவும் தெரிய வருகிறது. பாதுகாப்பு மகளிர் பாதுகாப்பு படை வீரர்கள் மீண்டும் ஒரு விமானத்தை கைப்பற்றி கடத்தல் முயற்சியை முறியடித்து இருக்கிறார்கள். முன்பு நவம்பர் 25ஆம் தேதி இதே போன்று ஆளில்லா விமானம் பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்தியாவிற்குள் நுழைந்ததும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Dinamani