Kathir News
Begin typing your search above and press return to search.

யு.பி.ஐ பணபரிமாற்றத்தில் தட்டி தூக்கும் இந்தியர்கள் - 90 சதவிகிதம் அதிகரித்த யு.பி.ஐ பண பரிவர்த்தனைகள்!

டிசம்பர் மாதத்தில் யு.பி.ஐ பண பரிவர்த்தனை 782 கோடியாக இந்தியாவில் அதிகரித்துள்ளது இது சாதனையாகும்.

யு.பி.ஐ பணபரிமாற்றத்தில் தட்டி தூக்கும் இந்தியர்கள் - 90 சதவிகிதம் அதிகரித்த யு.பி.ஐ பண பரிவர்த்தனைகள்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  3 Jan 2023 4:33 PM IST

டிசம்பர் மாதத்தில் யு.பி.ஐ பண பரிவர்த்தனை 782 கோடியாக இந்தியாவில் அதிகரித்துள்ளது இது சாதனையாகும்.

யு.பி.ஐ என அழைக்கப்படும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் ஸ்மார்ட்போன் பயனாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாகும், கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த வசதி பிரதமர் மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டது.

கூகுள் பே, பேடிஎம் போன்ற செயல்கள் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யூ.பி.ஐ பண பரிவர்த்தனை மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிமாற்று தொகை 12.8 லட்சம் கோடியாக உள்ளது இது கடந்த மாதத்தை காட்டிலும் 8 சதவிகிதம் அதிகமாகும்.

இந்திய தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் தரவுகளின் படி கடந்த அக்டோபர் மாதத்தில் 12.11 லட்சம் கோடி மதிப்பிலான 730 கோடி யு.பி.ஐ பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அக்டோபர் மாதத்தில் முதல் முறை ஒட்டுமொத்தமாக 2022 ஆம் ஆண்டு யு.பி.ஐ மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளை எண்ணிக்கை 74 கோடியாகும் பரிவர்த்தனை செய்யப்பட்ட தொகை 1.2 லட்சம் கோடி ஆகவும் உள்ளது. இதன்படி கடந்த ஆண்டுகளை காட்டிலும் 2022 ஆம் ஆண்டு பரிவர்த்தனை எண்ணிக்கை 90% அதிகரித்துள்ளது, பரிவர்த்தனை தொகை 76% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Source - The Tamil Hindu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News