புதிய வரி விதிப்புகள் இருக்காது: இந்தியாவின் அடுத்த 25 ஆண்டுகால வளர்ச்சியை உறுதி செய்யும் தரமான பட்ஜெட்!
India's economic growth estimated to be 9.27 pc, highest among all large economies

By : Kathir Webdesk
நாடாளுமன்றத்தில் 2022-2023ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2ஆவது ஆண்டாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 9.2%ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. நடுத்தர வகுப்பினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் நிதித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. உலகில் வேகமாக வளரும் பொருளாதாரத்தை கொண்ட நாடாக இந்தியா மாறி வருகிறது
சிறு, குறு, நடுத்தர தொழிற்துறையினரை மேம்படுத்தும் வகையில் புதிய வரி விதிப்புகள் இருக்காது. ஏழைகள், நடுத்தர மக்களின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு மத்திய அரசு செயல்படுகிறது. அடுத்த 25 ஆண்டுகால வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய இந்தியாவை கட்டமைப்பதற்கான பட்ஜெட்டாக நடப்பாண்டின் பட்ஜெட் இருக்கும். ஒருங்கிணைந்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வரும் நிதியாண்டில், புதிதாக 25,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து உட்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
ரயில் நிலையங்களையும், நகர்புற மெட்ரோக்களையும் இணைக்க பெரியளவில் திட்டம் கொண்டுவரப்படவுள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய ரயில்கள் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்படுகிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் 60 லட்சம் வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன.
ஆத்மநிர்பர் பாரத் என்ற தற்சார்பு இந்தியா திட்டம் பெரியளவில் வளர்ச்சியை கண்டுள்ளது. அவசர கால கடன் உதவி திட்டங்கள் மூலம் 1.30 கோடி சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பலன் பெற்றுள்ளன. சிறு, குறு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க வழங்கப்படும் அவசர கால கடன் உதவி திட்டம் 2023 மார்ச் வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது.
