Kathir News
Begin typing your search above and press return to search.

வரலாறு படைக்கும் இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி - கடந்த அண்டை விட 24.22 சதவீதம் அதிகரிப்பு

ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி 24.22 சதவீதம் அதிகரித்து 38.19 பில்லியன் டாலராக உள்ளது என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வரலாறு படைக்கும் இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி - கடந்த அண்டை விட 24.22 சதவீதம் அதிகரிப்பு

Mohan RajBy : Mohan Raj

  |  3 May 2022 11:00 AM GMT

ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி 24.22 சதவீதம் அதிகரித்து 38.19 பில்லியன் டாலராக உள்ளது என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, "ஏப்ரல் 2022 இல் சரக்கு ஏற்றுமதியின் மாதாந்திர மதிப்பு 38.19 பில்லியன் ஆகும், இது ஏப்ரல் 2021 இல் 30.75 பில்லியனை விட 24.22 சதவீதம் அதிகமாகும்" என்று வர்த்தக அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் ஏப்ரல் 2022'ல் பெட்ரோலியம் அல்லாத ஏற்றுமதியின் மதிப்பு 30.46 பில்லியன் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது, இது ஏப்ரல் 2021 இல் 27.12 பில்லியன் பெட்ரோலியம் அல்லாத பொருள்களின் ஏற்றுமதியை விட 12.32 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

அதன் விவரம் பின்வருமாறு, பெட்ரோலிய பொருட்கள் (113.21 சதவீதம்), எலக்ட்ரானிக் பொருட்கள் (64.04 சதவீதம்) மற்றும் கெமிக்கல்ஸ் (26.71 சதவீதம்) ஆகியவை ஏப்ரல் 2022 இல் ஏற்றுமதியில் அதிக அதிகரிப்புக்கு வழிவகுத்தன என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஏப்ரல் 2022 இல் இந்தியாவின் சரக்கு இறக்குமதி 58.26 பில்லியன் டாலராக இருந்தது, இது ஏப்ரல் 2021 இல் 46.04 பில்லியனை விட 26.55 சதவீதம் அதிகரித்துள்ளது.

"பெட்ரோலியம் அல்லாத இறக்குமதியின் மதிப்பு ஏப்ரல் 2022 இல் 38.75 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது, ஏப்ரல் 2021 இல் பெட்ரோலியம் அல்லாத இறக்குமதி 35.27 பில்லியன் டாலர்களை விட 9.87 சதவீதம் வளர்ச்சியுடன் உள்ளது" என்று அமைச்சகம் கூறியது.


Source - Swrajya

Next Story
கதிர் தொகுப்பு
Trending News