இந்திய கடல்சார் தயாரிப்புகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து ரூ.57 ஆயிரம் கோடியை தாண்டியது!

By : Kathir Webdesk
இந்தியா கடும் சவால்களுக்கு இடையே, 2021-22-ம் நிதியாண்டில், 57,586.48 கோடி மதிப்பிலான 13,69,264 டன் அளவிலான கடல் உணவுகளை ஏற்றுமதி செய்துள்ளது. 2021-22-ம் நிதியாண்டில், ஏற்றுமதி பணமதிப்பின் அடிப்படையில், 31.71 சதவீதம் அளவு அமெரிக்க டாலரில் 30.26 சதவீதமும், அளவின் அடிப்படையில் 19.12 சதவீதமும் அதிகரித்துள்ளது.
இந்தியா 2021-22-ம் ஆண்டில், ரூ.43,720.98 கோடி மெட்ரிக் டன் அளவிலான கடல் உணவுகளை ஏற்றுமதி செய்துள்ளது. கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர்ராகவன், கொவிட் அச்சுறுத்தலால், முக்கிய ஏற்றுமதி சந்தைகளில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டாலும், 13,69,264 மெட்ரிக் டன் அளவு மதிப்பிலான கடல் உணவுகளை இந்தியா ஏற்றுமதி செய்ய முடிந்தது என்று கூறினார்.
உறைந்த இறால் ஏற்றுமதியின் முக்கியப் பொருளாக முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், தென்கிழக்கு ஆசியா, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு ஆகியவை முக்கிய இறக்குமதியாளர்களாகும்.
Input From: Indian Express
