"நியூயார்க் டைம்ஸ்" நாளிதழால் பாராட்டப்பட்ட இந்தியா - விண்வெளித் துறைக்கு மோடியால் கிடைத்த சிறப்பு
விண்வெளி பந்தயத்தில் இந்தியா சிறப்பான இடத்தை பிடித்துள்ளதாக அமெரிக்க பத்திரிக்கை பாராட்டு தெரிவித்துள்ளது.
By : Karthiga
விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிகளில் இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ பல மைல்கல் சாதனைகளை படைத்து வருகிறது. விண்வெளி திட்டங்களில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியா முன்னேறி வருகிறது. சமீபத்தில் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி அந்த நாட்டின் ஜனாதிபதியை சந்தித்து பேசிய பிறகு விண்வெளி ஒத்துழைப்பின் அனைத்து துறைகளிலும் புதிய எல்லைகளை அடைய இருநாட்டு தலைவர்களும் உறுதி பூண்டு அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த நிலையில் அமெரிக்காவின் பிரபல நாளிதழான நியூயார்க் டைம்ஸ் இந்தியாவின் விண்வெளி திட்டங்களை வெகுவாக பாராட்டி கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. உலகின் விண்வெளி வணிகத்தில் வியக்க வைக்கும் முயற்சியாளர் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த கட்டுரையில், 1963ல் தனது முதல் ராக்கெட்டை ஏவிய போது உலகின் அதிநவீன தொழில்நுட்பத்தை பின்பற்றவும் ஏழை நாடாக இந்தியா இருந்தது. இந்தியாவின் முதல் ராக்கெட் ஒரு சைக்கிள் கேரியரில் வைத்து எடுத்துச் சென்று விண்ணில் ஏவப்பட்டது.
இன்றைய விண்வெளி பந்தயத்தில் இந்தியா மிகவும் உறுதியான இடத்தை பெற்றுள்ளது. இந்தியா குறைந்தது 140 பதிவு செய்யப்பட்ட விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தாயகமாக மாறி உள்ளது. ஒரு விஞ்ஞான சக்தியாக இந்தியா முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை பெறுகிறது. அமெரிக்காவும் இந்தியாவும் விண்வெளியை ஒரு களமாக பார்க்கின்றன. அதில் இந்தியா தங்கள் பரஸ்பர போட்டியாளரான சீனாவுக்கு எதிர் சக்தியாக வெளிப்பட முடியும்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் மோடி விண்வெளி துறைக்கான உத்வேகத்தை அறிவித்த போது அனைத்து வகையான தனியார் நிறுவனங்களும் அதை திறந்து, இந்தியா வணிகங்களின் வலையமைப்பை தொடங்கியது. கடந்த ஆண்டு விண்வெளி தொடக்கம் புதிய முதலீட்டில் 120 மில்லியன் அமெரிக்க டாலர்கள் உயர்ந்துள்ளது. இது ஆண்டுக்கு இரட்டிப்பு அல்லது மும்மடங்காகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Source:Daily thanthi