Kathir News
Begin typing your search above and press return to search.

அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை விட அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இந்தியாவின் ஒற்றுமை சிலை!

அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை விட அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இந்தியாவின் ஒற்றுமை சிலை!

அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை விட அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இந்தியாவின் ஒற்றுமை சிலை!

Saffron MomBy : Saffron Mom

  |  18 Jan 2021 6:51 PM GMT

ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் கெவடியா பகுதியில் ஒரு சிறிய நகரில் இருந்து பெருசாக மாறிக்கொண்டிருக்கிறது என்று அவர் தெரிவித்தார். மேலும் அந்த பகுதியில் இந்தியாவின் ஒற்றுமையின் சிலை(statue of unity) அமைந்திருப்பதால் நியூயார்க்கில் அமைந்துள்ள சுந்தந்திர தேவி சிலையைக் காட்டிலும் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றது என்று அவர் தெரிவித்தார்.

பிரதமர் மோடி கேவடியாவில் இருந்து குஜராத்தில் பல பகுதிகளை இணைக்கும் எட்டு ரயில்களை வீடியோ கான்பிரென்ச்ஸ் போது துவக்கி வைக்கையில் பேசினார். கெவடியாவில் முன்னேற்ற வளர்ச்சிகள் குறித்துப் பேசுகையில், "ஸ்டெச்யூ ஆப் யூனிட்டி அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துவருகின்றது," என்பதைப் பிரதமர் குறிப்பிட்டார்.
"சிலை வைக்கப்பட்ட பின்பு 50 லட்ச சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளது," என்று கூறினார். மேலும், "இந்த இணைப்பின் மூலம் ஒரு நாளைக்கு ஒரு லட்ச சுற்றுலாப் பயணிகள் கெவடியாவுக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழலில் கெவடியா ஒரு பொருளாதார மற்றும் சுற்றுலா தளங்களின் திட்டமிட்ட வளர்ச்சிக்குச் சான்றாகும்," என்று கூறினார்.
"முதலில் கெவடியா எந்தவித சாலை இணைப்பும் இன்றி, தெருவிளக்கு இன்றி ரயில் சுற்றுலாத்தலமின்றி இருந்தது. ஆனால் தற்போது அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. மேலும் ஈர்க்கும் வகையில் சர்தார் படேல் விலங்கியல் பூங்கா, ஆரோக்கிய வான், ஜங்கிள் சஃபாரி மற்றும் போஷன் பூங்கா முதலியவற்றைக் கொண்டுள்ளது."
மேலும் இங்குச் சுற்றுலா எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஆதிவாசி இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு அதிகரித்து உள்ளது மற்றும் உள்ளூர் மக்கள் நவீன வசதிகளை அதிகம் பெற்றுள்ளனர். "ஏக்த மாலில் கைவினை பொருட்களை வைப்பதற்கான இடமும் உள்ளது. மேலும் ஆதிவாசி கிராமங்களில் ஹோம் ஸ்டேகளுக்காக 200 அறைகள் கட்டப்பட்டு வருகின்றன," என்று கூறினார்.
ரயில்வே இணைப்பு குறித்துப் பேசிய பிரதமர், இது சரக்கு போக்குவரத்து மற்றும் பயணிகள் தவிர இது நேரடியாக-மத மற்றும் சுற்றுலாத் தலங்களுக்குச் சென்றடைகின்றது என்று கூறினார்.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News