Begin typing your search above and press return to search.
ஓய்வுபெறும் ஐ.என்.எஸ். சந்தயக் போர் கப்பல்: எளியமுறையில் நடைபெறும் விழா.!
இந்திய கடற்படையில் 40 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ஐஎன்எஸ் சந்தயக் போர் கப்பல் இன்றுடன் பணி நிறைவு செய்கிறது.

By :
இந்திய கடற்படையில் 40 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ஐஎன்எஸ் சந்தயக் போர் கப்பல் இன்றுடன் பணி நிறைவு செய்கிறது.
இந்தியாவின் கடற்படை பயன்பாட்டுக்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தக் கப்பல் கடந்த 1981ம் ஆண்டு இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இந்தியாவில் சுனாமி ஏற்பட்டபோது மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு இந்தக் போர்க் கப்பல் உறுதுணையாக நாட்டிற்காக சேவையாற்றியது.
இந்நிலையில், தனது 40 ஆண்டுகால பணியை முடித்துக்கொண்டு ஐஎன்எஸ் சந்தயக் போர் கப்பல் இன்றுடன் ஓய்வு பெறுகிறது. இதற்கான விழா ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை தளத்தில் மிகவும் எளிய முறையில் நடைபெறுகிறது. கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டு தங்களது நன்றியை இந்த கப்பலுக்கு தெரிவிப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.
Next Story