Begin typing your search above and press return to search.
இந்தியாவிற்குள் ஊடுருவ PoK வில் மறைந்திருக்கும் இஸ்லாமியப் பயங்கரவாத குழு - உளவுத்துறை எச்சரிக்கை!
இந்தியாவிற்குள் ஊடுருவ PoK வில் மறைந்திருக்கும் இஸ்லாமியப் பயங்கரவாத குழு - உளவுத்துறை எச்சரிக்கை!

By :
பாகிஸ்தானின் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகளான ஜெய்ஷ்-இ-முகமத், லஸ்கர்-இ-தாய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற அமைப்புகள் காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள இடங்களில் பதுங்கியிருந்து காஷ்மீர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து தற்கொலைப் படை தாக்குதல் நடத்த முயற்சிப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தால் சேகரிக்கப்பட்ட அறிக்கையின் படி, இந்த அமைப்புகள் காஷ்மீரில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த அமைப்புகள் தனித்தனியா இந்தியா மீது தாக்குதல் நடத்த வேலை செய்து வருகின்றது. உளவுத்துறையின் அறிக்கையின் படி, லஸ்கர்-இ-தாய்பா அமைப்பில் ஆறு நபர்கள் காஷ்மீரில் பூஞ்ச் பகுதியில் முகாமிட்டுள்ளனர். அவர்களுக்குப் பாகிஸ்தான் எல்லை நடவடிக்கை குழு இந்திய இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்த உதவியளித்து வருகின்றது. இந்த குழுக்கள் பாகிஸ்தான் இராணுவத்துடன் இணைந்து இந்திய எல்லைக்கோட்டைத் தாண்டி தாக்குதல் நடத்த முயல்கின்றது.
இந்த அமைப்பு, நான்கு ஜெய்ஷ்-இ-முகமத் சேர்ந்த தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் சுரங்கப்பாதை வழியாக வந்து தாக்குதல் நடத்த முயற்சிக்கின்றது. மேலும் இந்திய இராணுவம் இதுபோன்று பாகிஸ்தானிலிருந்து வரும் பல சுரங்கப்பாதைகளைக் கண்டுபிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த பல பயங்கரவாத குழுக்கள் இந்தியாவில் ஊடுருவ முயற்சி செய்கின்றது.

மேலும் ஜனவரி 12 இல் செய்தி தொடர்பாளர் கூட்டத்தில் பாகிஸ்தான் தனது எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்ளப் பயங்கரவாதத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றது என்று இந்திய இராணுவ தலைவர் MM நார்வனே தெரிவித்தார். "பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றது. இந்தியா சரியான நேரத்தில் அதற்குத் தக்க பதிலடி கொடுக்கும்," COAS பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தது.
Next Story