Kathir News
Begin typing your search above and press return to search.

சர்வதேச விமான கண்காட்சி - உலக நாடுகளை சேர்ந்த 63 விமானங்கள் வானில் சாகசம்!

சர்வதேச விமான கண்காட்சி - உலக நாடுகளை சேர்ந்த 63 விமானங்கள் வானில் சாகசம்!

சர்வதேச விமான கண்காட்சி - உலக நாடுகளை சேர்ந்த 63 விமானங்கள் வானில் சாகசம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  3 Feb 2021 5:01 PM GMT

பெங்களூருவில் 13வது சர்வதேச விமான கண்காட்சியை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தொடங்கி வைத்தார். பெங்களூருவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச விமான கண்காட்சி நடத்தப்படுகிறது. இதனை காண இந்தியா மட்டுமில்லாமல், உலகின் பல நாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் வருவார்கள். அதன்படி இந்த ஆண்டிற்கான 13வது சர்வதேச விமான கண்காட்சி இன்று தொடங்கி 5ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

அதன்படி பெங்களூரு எலஹங்காவில் உள்ள விமானப்படை பயிற்சி மைதானத்தில் 13வது சர்வதேச விமான கண்காட்சியை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடக்கி வைத்தார். இந்த தொடக்க விழாவில் மிக் 17 ரக ஹெலிகாப்டர்கள் வானில் வட்டமடித்து அணிவகுத்துச் சென்றனர். விமான கண்காட்சியில் இந்திய விமான படைக்கு சொந்த சாரங்க் ஹெலிகாப்டர்கள், சூரியகிரண் விமானங்கள், டகோடா, சுகோய், ரபேல், எல்சிஎச், எல்யூஎச், ஜாக்வர், ஹாக், பைட்டர் ஜெட், ஏர்கிராப்ட் ஹெலிகாப்டர்கள் சாகசம் செய்கின்றன.

இந்தியா உள்பட பல நாடுகளை சேர்ந்த 63 விமானங்கள் சாகசங்கள் செய்கின்றன. இதில் 42 விமானங்கள் தினமும் இருமுறை சாகசத்தில் ஈடுபடுகிறது. கடந்த ஜனவரி 13ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவை குழு இந்திய விமானப்படையின் போர் வலிமையை உயர்த்துவதற்காக 73 தேஜஸ் MK -1 ஏ வேரியண்ட்கள் மற்றும் 10 LCA தேஜாஸ் MK -1 பயிற்சி விமானங்களை HAL நிறுவனத்தில் இருந்து வாங்க 48,000 கோடி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது.

இதை செயல்படுத்தும் வகையில் எலஹங்கா விமானப்படை மைதானத்தில் நடக்கும் விழாவில் இன்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்,48,000 கோடி ஒப்பந்தத்தின் கீழ் தேஜாஸ் எல்.சி.ஏவை இந்திய விமானப்படைக்கு வழங்குவது தொடர்பான பணியையும் தொடக்கி வைத்தார். வரும் 2024 மார்ச் முதல் தொடங்கி, மொத்தம் 83 ஜெட் விமானங்களை வழங்கும் வரை ஆண்டுதோறும் 16 விமானங்கள் உருவாக்கப்படும் என்று இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஆர். மாதவன் தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News