புதுப்பிக்க வல்ல எரிசக்தி துறை.. மாற்றத்தை நோக்கி G20 நாடுகளை அழைக்கும் இந்தியா...
சர்வதேச மாநாட்டை மத்திய அமைச்சர் இன்று தொடங்கி வைப்பார்.
By : Bharathi Latha
ரசாயனங்கள் மற்றும் பெட்ரோரசாயனங்கள் மீதான கவனக் குவிப்புடன் இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் ஒத்துழைப்பில் உலகளாவிய வணிக சமூகத்தினருக்கான P20 மாநாட்டிற்கு ரசாயனங்கள் மற்றும் பெட்ரோரசாயனங்கள் துறை இன்று புதுதில்லியில் ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டை மத்திய ரசாயனங்கள், உரங்கள், புதிய மற்றும் புதுப்பிக்க வல்ல எரிசக்தி துறை இணையமைச்சர் பகவந்த் கூபா தொடங்கிவைப்பார். ரசாயனங்கள் மற்றும் பெட்ரோரசாயனங்கள் துறை செயலாளர் மற்றும் G20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் முன்னிலை வகிப்பார்கள்.
இந்த மாநாட்டில், பி20 நாடுகளின் அரசுப் பிரதிநிதிகள், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழில் சங்கம் கூட்டமைப்பைச் சேர்ந்த 500க்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள். ஜெர்மனி, மெக்சிகோ, ரஷ்யா, ஹங்கேரி, அமெரிக்கா, பெல்ஜியம், சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்டுகள், தென் கொரியா ஆகியவற்றைச் சேர்ந்த தொழில் துறை பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கரியமிலவாயு வாயு நீக்கம், சுழற்சிப் பொருளாதாரம், பல்லுயிர் பெருக்கம், தண்ணீர் சேகரிப்பு என்ற நான்கு தூண்களில் ரசாயனங்கள் மற்றும் பெட்ரோ ரசாயனங்கள் தொழில்துறைக்கு பாதுகாப்பு மற்றும் நீடிக்க வல்ல சூழலை மேம்படுத்துவது இந்த மாநாட்டின் நோக்கமாகும். P20 என்பது உலகளாவிய வணிக சமூகத்திற்கான அதிகாரபூர்வ G20 பேச்சுவார்த்தை அமைப்பாகும்.
Input & Image courtesy: News