சர்வதேச யோகா தினம்: நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு!
By : Thangavelu
யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா, விளையாட்டு பிரபலங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என்று பலரும் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடி வருகின்றனர்.
சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. யோகாவை உலகிற்கு அறிமுகம் செய்த இந்தியாவில் இன்று காலை முதலே யோகா செய்து அசத்தப்பட்டு வருகிறது. அதன்படி கர்நாடக மாநிலம், மைசூரு அரண்மனையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்பித்தார். அதே போன்று பா.ஜ.க. சார்பில் நாடு முழுவதும் 75 நகரங்களில் மிக பிரமாண்ட யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் 15 ஆயிர் பேர் பங்கேற்றனர்.
மேலும், பா.ஜ.க. மாநிலத் தலைவர்கள், தேசிய நிர்வாகிகள் என்று பலரும் யோகா செய்தனர். டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் யோகா செய்தார். உத்தர பிரதேச மாநிலத்திலும் யோகா தினம் அனுசரித்தனர். மேலும், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நொய்டாவில் யோகா தினத்தை கடைப்பிடித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியிலும் யோகா செய்தார்.
அதே போன்று இந்திய ராணுவ வீரர்களும் யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பான முறையில் யோகா செய்து அசத்தினர். சுமார் 17,000 அடி உயரத்தில் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் யோகா செய்து அசத்தினர், இந்தோ, திபெத் எல்லை வீரர்கள். இது பற்றிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மேல் சட்டை அணியாமல் கடுமையான குளிரிலும் சூரிய நமஸ்காரம் செய்து யோகா செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். தமிழக பா.ஜ.க. சார்பிலும் யோகா தினத்தை முன்னிட்டு தலைவர்கள், நிர்வாகிகள் ஆங்காங்கே யோகா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: One India Tamil
Image Courtesy: Twitter