Kathir News
Begin typing your search above and press return to search.

கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் போராடும் வல்லமை யோகாவுக்கு உண்டு: சர்வதேச யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை.!

நமது கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனாவை வெல்வதற்கு நாம் கட்டாயம் யோகாவை கடைப்பிடிக்க வேண்டும். யோகா மனநலம், உடல் வலிமையை கூட்டுகிறது. யோகா எதிர்மறை சக்தியுடன் எதிர்த்து போராடுவதற்கு உதவுகிறது.

கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் போராடும் வல்லமை யோகாவுக்கு உண்டு: சர்வதேச யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை.!
X

ThangaveluBy : Thangavelu

  |  21 Jun 2021 10:07 AM IST

கொரோனா பெருந்தொற்று காலத்தில் புதிய நம்பிக்கை ஒளியை யோகா ஏற்படுத்தியது என்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி உரையாற்றினார். இன்று சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி யோகாவால் ஏற்படும் நன்மைகள் குறித்து பிரதமர் மோடி தொலைக்காட்சியில் உரையாற்றினார்.

யோகா பற்றி அவர் பேசும்போது, ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆரோக்கியத்திற்கு யோகா என்பது மிகப்பெரிய வரபிரசாதம். மேலும், உடல் நலம் மற்றும் மனநலம் பெறுவதற்கு வாழ்த்துகிறேன். கொரோனா சமயத்தில் புதிய நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தியது யோகா மட்டும்தான். கொரோனாவை யோகா மறக்க செய்துள்ளது.

நமது கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனாவை வெல்வதற்கு நாம் கட்டாயம் யோகாவை கடைப்பிடிக்க வேண்டும். யோகா மனநலம், உடல் வலிமையை கூட்டுகிறது. யோகா எதிர்மறை சக்தியுடன் எதிர்த்து போராடுவதற்கு உதவுகிறது.

தெய்வப் புலவர் திருவள்ளுவர், நோய் நாடி முதல் நாடி அது தணிக்கும்வாய் நாடி வாய்ப்பச் செயல், இந்த குறள் மூலம் ஒரு நோயின் அடிப்படை காரணத்தை தெரிந்துக்கொண்டு நாம் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது திருவள்ளுவரின் கூற்றாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News