Kathir News
Begin typing your search above and press return to search.

குறைந்த விலையில் ராமாயண யாத்திரை சுற்றுலா ! லாபத்தையும் புண்ணியத்தையும் அதிகரிக்கும் I.R.C.T.C !

குறைந்த விலையில் ராமாயண யாத்திரை சுற்றுலா ! லாபத்தையும் புண்ணியத்தையும் அதிகரிக்கும் I.R.C.T.C !

DhivakarBy : Dhivakar

  |  9 Nov 2021 5:47 AM GMT

ராமாயண யாத்திரை சுற்றுலா என்ற மத சுற்றுலாவை இந்திய ரயில்வே மற்றும் சுற்றுலா கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு பக்தர்களையும், பொது மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ராமாயண காவியத்தை எவராலும் மறக்க முடியாதது. அதில் வரும் கதா பாத்திரங்களும், காட்சிகளும், அந்த காட்சிகள் நடந்தேறிய இடங்களையும் எவராலும் மறக்க முடியாதது. அந்த இடங்கள் தற்போது வரை புனிதத்தன்மை பெற்றவையாக திகழ்ந்து வருகிறது. ஆகையால் ராமாயண காவியத்துடன் தொடர்புடைய இடங்களை காணும் வகையில் ராமாயண யாத்திரை என்ற ஒரு புதிய சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது இந்திய ரயில்வே மற்றும் சுற்றுலா கழகம்.

இதுகுறித்து இந்திய ரயில்வே புதுடெல்லியில் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :

கரோனா வைரஸின் பாதிப்பு குறைந்து வருவதால், மக்களின் தேவைக்கு ஏற்றார் போல், பல்வேறு இடங்களுக்கு ஐஆர்சிடிசி சார்பில் சுற்றுலா ரயில்கள் இயக்கப்படுகின்றன. ராமாயண காவியத்துடன் தொடர்புடைய இடங்களைக் காணும் வகையில், ராமாயண யாத்திரை சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ரயில் பயணம் வரும் நவம்பர் 16-ம் தேதி மதுரையில் இருந்து புறப்படுகிறது. திண்டுக்கல், திருச்சி, கும்பகோணம், கடலூர், விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாகச் செல்கிறது. ஹம்பி, நாசிக், சித்ரகூட், காசி, கயா, சீதாமார்ஹி, நேபாளம், ஜனக்புரியில் உள்ள சீதா ஜென்மபூமி, அயோத்தியில் ராமஜென்ம பூமி, நந்திகிராம், சிருங்க வெற்பூர், அலகாபாத் போன்ற இடங்களைக் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 12 இரவுகள், 13 பகல்கள் கொண்ட இந்த சுற்றுலாவுக்கு கட்டணம் ரூ.14,490 ஆகும். இதில், ரயில் கட்டணம், தங்கும் வசதி, சைவ உணவு ஆகியவை அடங்கும். இதில் பங்கேற்க விரும்புவோர் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு ஐஆர்சிடிசி கூறியுள்ளது.

இந்த புதிய திட்டம் இந்திய ரயில்வேவுக்கு வருவாயையும் , பக்தர்களுக்கு புனித இடங்களை தரிசித்ததால் புண்ணியத்தையும் அதிகரிக்கும் என்பது திண்ணம்.

The Hindu




Next Story
கதிர் தொகுப்பு
Trending News