Kathir News
Begin typing your search above and press return to search.

உள்நாட்டிலேயே தயாரான கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வரப்போகிறதா? கெத்து காட்டும் இந்திய நிறுவனம்.!

உள்நாட்டிலேயே தயாரான கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வரப்போகிறதா? கெத்து காட்டும் இந்திய நிறுவனம்.!

உள்நாட்டிலேயே தயாரான கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வரப்போகிறதா? கெத்து காட்டும் இந்திய நிறுவனம்.!
X

Muruganandham MBy : Muruganandham M

  |  10 Dec 2020 2:06 PM IST

பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு 64 நாடுகளை சேர்ந்த உயர் அதிகாரிகளின் வெற்றிகரமான வருகைக்குப் பிறகு, நிர்வாக இயக்குனர் சுசித்ரா எலா, கொரோனா தடுப்பூசியான 'கோவாக்சின்' 2021 ஆண்டின் முதல் காலாண்டில் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். "பாதுகாப்பு மற்றும் செயல்திறன் தரவுகளுடன், கோவாக்சின் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், இந்திய அரசு படிப்படியாக தடுப்பூசி போடத் திட்டமிட்டுள்ளது. என்று கூறினார்.

புதன்கிழமை, 64 நாடுகளை சேர்ந்த அதிகாரிகள் ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்ட பாரத் பயோடெக் வளாகத்திற்கு வருகை தந்தனர். இந்த பயணத்தின் போது, ​​பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் கிருஷ்ணா எலா, நாட்டின் தடுப்பூசி உற்பத்தி திறன்களை விளக்கக்காட்சியாக வழங்கினார். உலகளாவிய தடுப்பூசிகளில் கிட்டத்தட்ட 33% ஹைதராபாத்தின் ஜீனோம் பள்ளத்தாக்கில் தயாரிக்கப்படுவதாக டாக்டர் எலா வெளிநாட்டுத் தலைவர்களுக்கு தெரிவித்தார்.

இதற்கிடையில், மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு கோவிட் -19 தடுப்பூசிக்காக பாரத் பயோடெக் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்.ஐ.ஐ) ஆகியவற்றிற்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் தரவுகளை கோரியுள்ளது. பாரத் பயோடெக் பரிசோதனையைத் தொடர்ந்து சரியான நேரத்தில் மற்ற நகரங்களில் இதே போன்ற வசதிகள் தர திட்டமிடப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News