ஒவைசியுடன் கூட்டு சேர்கிறதா வி.சி.க ? ரஜினிகாந்த் உடனும் பேச வாய்ப்புள்ளதாக தகவல்கள்.!
ஒவைசியுடன் கூட்டு சேர்கிறதா வி.சி.க ? ரஜினிகாந்த் உடனும் பேச வாய்ப்புள்ளதாக தகவல்கள்.!

By : Rama Subbaiah
தமிழ்நாட்டில் சிந்தாந்தரீதியாக ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க-வை எதிர்க்கக்கூடிய ஒரே கட்சி நாங்கள்தான் என வி.சி.க-தலைவர் திருமாவளவன் கூறி வருவது வழக்கம். இதற்காக `தேசம் காப்போம்' என்ற பெயரில் மாநாடு, பேரணி எனத் தொடர்ந்து அந்த கட்சி செயல்பட்டுவருகிறது.
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலாளர்களான வடசென்னை கபிலன், ஈரோடு விநாயகமூர்த்தி உட்பட பலரும் தமிழக பா.ஜ.க-வில் ஐக்கியமாகிவிட்டனர். இவர்களின் ஆதரவாளர்கள்ஏராளமானோர் சில வாரங்களுக்கு முன்னர் எல்.முருகன் முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்தனர்.
`சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், ஒவ்வொரு கட்சியிலிருந்தும் முக்கியப் பிரமுகர்களை வளைக்கும் வேலையில் பா.ஜ.க ஈடுபட்டுவருவதாக கூறப்படும் நிலையில் இதுவரை பாஜகவை விட்டு வெகு தூரம் தள்ளி நின்ற விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர்கள் தொண்டர்களுடன் பாஜகவில் இணைவது அதிசயமாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இதற்கான காரணம் குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகையில் " பொதுவாக தமிழகத்தில் வரும் தேர்தலைப் பொறுத்தவரை ஒரு மாற்றம் வேண்டும் என்ற நிலையில் இளைய தலைமுறையினர் உள்ளனர், குறிப்பாக வி.சி.கவில் தலித் சமுதாய மக்கள் அதிக அளவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வி.சி.க மாறி மாறி திமுக மற்றும் அதிமுகவிடம் மட்டுமே இது வரை உறவு பூண்டு வந்துள்ளது. அல்லது மூன்றாவது அணியில் சிக்கி படு தோல்வியடைந்துள்ளது. மேலும் திருமாவளவன் நிலைப்பாட்டின் பயன்கள் சிருபான்மையினருக்குதான், ஆனால் தலித்துகளுக்கு இதில் என்ன பயன் என அந்த சமுதாயத்தினர் சிந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பாஜகவின் போக்கில் சமீப காலமாக மாற்றங்கள் தெரிகின்றன. தலித் சமுதாய ஆதரவு விஷயத்தில் அகில இந்திய அளவில் அக்கட்சி மிக சிறப்பாகவே செயல்படுகிறது. மேலும் தமிழகத்தில் பாஜக தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர்களுக்கு முன்பை விட அதிக முக்கியத்துவம் அளித்து வருவதக்கவும் கூறபபடுகிறது.
இந்நிலையில் மிகவும் படித்த, தேசீயவாதியான தலித் சிந்தனையாளர் எல்.முருகனை அக்கட்சி தலைவராக்கியுள்ளது. தமிழக உணர்வுகள் மற்றும் தேசீய உணர்வுகள் அனைத்தையும் அவர் அனுசரித்து செல்வதாலும், பாஜக அகில இந்திய அளவில் மேலும் நாளுக்கு நாள் பலம் பெற்று வருவதாலும் தற்போது தமிழக தலித் சமுதாயத்தினரின் சிந்தனைகள் மாறி வருவதாக கூறப்படுகிறது.
அதனால்தான் சிறுத்தைகள் கட்சியில் இருந்து பாஜகவை நோக்கி பலர் செல்வதாக அரசியல் பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.
அதே சமயம் பாமகவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அளவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அதிமுக, திமுக இரண்டும் முக்கியத்துவம் அளிப்பதில்லை என்பதும் சில தலித் மக்களின் கருத்தாகவும், திருமாவளவனின் எண்ணமாகவும் உள்ளது.
குறிப்பாக தலித் வாக்குகளும், சிறுபான்மை வாக்குகளும் தானாகவே தங்களுக்குதான் கிடைக்கும் என்ற முந்தைய மனப்பான்மையில் திமுக தலைவர்கள் உள்ளதாக கூறுகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் மொத்த வாக்குகளில் 6 சதவீதம் கொண்டுள்ள முஸ்லிம் வாக்குகளையும், கிட்டத்தட்ட 17 சதவீதம் வரை வாக்குகள் கொண்ட தலித் சமுதாய வாக்குகளையும் இணைத்து வெற்றி பெறலாம் என அசாசுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது,
ரஜினிகாந்த் தற்போது ஜனவரியில் கட்சி தொடங்குவது உறுதி என அறிவித்துள்ள நிலையில் அவரது மன்றம் பாஜகவுடன் கூட்டு இல்லை என தெரிந்தால் இவர்கள் ரஜினியுடன் பேச வாய்ப்புண்டு என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் முஸ்லிம்கள் வாக்கு அதிகமாக உள்ள வேலூர், ஆம்பூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, ஈரோடு , நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டால் குறைந்தது 30 தொகுதிகளை இருதரப்பும் அள்ள முடியும் என திட்டமிட்டு அக்கட்சி விடுதல் சிறுத்தைகளுடன் பேசி வருவதாக செய்திகள் வந்துள்ளன.
இந்நிலையில் பாஜகவுடன் தொடர்பு வேண்டாம் என ரஜினிகாந்த் முடிவெடுத்தால் கடைசி நேரத்தில் காங்கிரஸ் ரஜினி கூட்டணியுடன் சாயவும் வாய்ப்புண்டு எனவும், இதன் மூலம் ஒரு சரியான மூன்றாவது அணி அமைய வாய்ப்புள்ளதாகவும் பேசப்படுகிறது.
