Kathir News
Begin typing your search above and press return to search.

ISI அமைப்பிற்கு ராணுவ ரகசியங்களை வழங்கிய இரண்டு ராணுவ வீரர்கள் கைது!

ISI அமைப்பிற்கு ராணுவ ரகசியங்களை வழங்கிய இரண்டு ராணுவ வீரர்கள் கைது!

ParthasarathyBy : Parthasarathy

  |  8 July 2021 1:30 AM GMT

பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லை பகுதியில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் அங்கு வந்த ரன்வீர் சிங் என்பவர் 70 கிராம் ஹெராயின் போதைப்பொருளை எல்லை தாண்டி பாகிஸ்தானுக்கு கடத்த முயற்சி செய்த போது, அங்கு சோதனையில் இருந்த காவல்துறை அதிகாரிகளிடம் சிக்கி கொண்டார். அவரிடம் மேலும் சோதனை செய்த போது இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் குறித்த ரகசிய ஆவணங்கள் இருந்ததை கண்டு போலீசார் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து அவரிடம் இருந்த ராணுவ ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட பின்பு, அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.


இது பற்றி காவல்துறை அவரிடம் விசாரித்ததில் அமிர்தசரஸ் நகரில் பணியாற்றி வரும் ராணுவ வீரர்களான ஹர்பிரீத் சிங் மற்றும் குர்பேஸ் சிங் ஆகிய இருவரும் பணத்துக்காக ராணுவ ரகசியங்களை திருடி ரன்வீர் சிங் மூலமாக பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்கு வழங்கி வந்தது தெரியவந்தது.


இதனைத் தொடர்ந்து பஞ்சாப் காவல் துறையினர் ஹர்பிரீத் சிங் மற்றும் குர்பேஸ் சிங்கின் செயல்பாடுகளை கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ரகசியமாக கண்காணித்து வந்தனர். இதில் அவர்கள் ராணுவ ரகசியங்களை திருடி வழங்கியது மட்டுமல்லாமல் ஐ.எஸ்.ஐ க்காக உளவு பார்த்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ராணுவ வீரர்கள் இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இது குறித்து காவல் துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News