வெற்றிகரமாக ஏவிய GSLV மார்க் 3 ராக்கெட் - பிரதமர் ஆதரவால் சாத்தியம்!
GSLV மார்க் 3 ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியதன் மூலமாக வர்த்தக சந்தைக்கு கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவால் இது சாத்தியமானது.
By : Bharathi Latha
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தயாரித்துள்ள பிரம்மாண்டமான ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்த நேற்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இங்கிலாந்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஒன் வெப் இந்தியா 1 நிறுவனத்தின் 36 தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களையும் இந்த ராக்கெட் விண்ணில் நிலை நிறுத்தி உள்ளது. இந்த வகையில் இந்த ராக்கெட் முதல் வணிக பயணம் இதுவாகும்.
இந்த நிகழ்ச்சிக்கு பின் இஸ்ரோ தலைவர் எஸ்.சோமசுந்தரம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், இது பற்றி கூறுகிறார். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்த ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் வெற்றிகரமாக எறியதன் மூலம் நாங்கள் ஏற்கனவே தீபாவளி கொண்டாட்டத்தை தொடங்கி விட்டோம். இது ஒரு வரலாற்றுப் பணியாகும். ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் வர்த்தக சந்தைக்கு கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவால் இது சாத்தியமானது. டிசம்பர் மாத கடைசி இரண்டாவது GSLV ஆகட்டும் விண்ணில் ஏவப் படுகிறது.
சந்திராயன் 3 திட்டம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்க தயாராக உள்ளது. இறுதி ஒருங்கிணைப்பு மற்றும் பல்வேறு கட்ட சோதனைகள் முடிந்துவிட்டன. இன்னும் சில சோதனைகள் நிலுவையில் உள்ளன. எனவே அடுத்த ஆண்டு செயல்படுத்த இதை விரும்புகிறோம். மனிதனை விண்ணுக்கு அனுப்பும் கங்கன்யா ராக்கெட்டிலும் எல்.வி.எம் 3 ராக்கெட் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த ராக்கெட்டில் விண்வெளி வீரர்கள் பயணம் செய்ய இருப்பதால், தற்போது ஏவப்பட ராக்கெட் விட நான்கு மடங்கு பாதுகாப்பு அம்சங்கள் அதிகரிக்கப்படும். அடுத்த ஆண்டு 1 வெப்புக்கு சொந்தமான மேலும் 36 செயற்கை செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்த இருக்கிறோம். இதற்குப் பிறகு மீண்டும் ஜி எஸ் எல் வி மார்க் 3 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று கூறி இருக்கிறார்.
Input & Image courtesy: India Today