5 ஆண்டுகளில் 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் - புதிய மைல்கல்லை எட்டிய இஸ்ரோ!
ஐந்து ஆண்டுகளில் மட்டும் சுமார் 177 வெளிநாட்டு செயற்கை கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தி இருக்கிறது.
By : Bharathi Latha
இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் இந்திய செயற்கை கோள்களை மட்டுமல்லாது, வெளிநாட்டில் தயார் செய்த செயற்கைக்கோள்களையும் இந்தியாவில் இருந்து விண்ணில் செலுத்தி சாதனை படைத்து வருகிறத. அந்த வகையில் தற்பொழுது கடந்த ஐந்து ஆண்டுகளில் 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தியதாக பாராளுமன்றத்தில் தற்போது தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக பாராளுமன்ற ராஜா சபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் ராஜேந்திர சிங் பதில் ஒன்றை எழுதி இருக்கிறார்.
இந்த பதில் மூலம், தற்பொழுது அனைவரின் கேள்விக்கும் விடை கிடைத்து இருக்கிறது. குறிப்பாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. அந்த வகையில் தற்போது இஸ்ரோவின் PSLV, MSLV -எம்.கே 3 ராக்கெட் மூலமாக கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து 2020 இரண்டாம் ஆண்டு வரை என அந்த ஆண்டுகளில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் 177 செயற்கைக் கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு இருக்கிறது குறிப்பிட்டு இருக்கிறார்.
இதுபோன்று வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய இதன் மூலமாக இந்தியாவிற்கு அன்னிய செலவாணியும் அதிகமாகவே கிடைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணை செலுத்தியதன் மூலமாக, இந்தியாவிற்கு 94 பில்லியன் அமெரிக்க டாலரும், 46 மில்லியன் யூரோவும் அந்நிய செலவானியாக கிடைத்திருக்கிறது என்று அவர் தன்னுடைய பதிலில் தெரிவித்துக் கொள்கிறார்.
Input & Image courtesy: Dinamalar