இஸ்ரோ தலைவர் சிவன் பதவிக்காலம்.. மீண்டும் ஓராண்டு நீட்டித்த மத்திய அரசு.!
இஸ்ரோ தலைவர் சிவன் பதவிக்காலம்.. மீண்டும் ஓராண்டு நீட்டித்த மத்திய அரசு.!

இந்திய விண்வெளி ஆய்வு மைய தலைவர் சிவனின் பதவிக்காலத்தை ஓராண்டுக்கு நீட்டித்தது மத்திய அரசு. அதன்படி 2022 ஜனவரி 14ம் தேதி வரை இவர் பதவியில் நீட்டிப்பார்.
2018ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டார் தமிழ்நாட்டைச் சேர்ந்த கே.சிவன். இவரின் பதவிக்காலம் 2021 ஜனவரி 14ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.
இந்நிலையில், இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அவரின் பதிவிக்காலம் 2022 ஜனவரி 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
1982ம் ஆண்டு இஸ்ரோ விஞ்ஞானியாக தன்னை இணைத்துக்கொண்டவர் சிவன், இஸ்ரோவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து, பின்னர் பிஎஸ்எல்வி திட்டத்தில் முக்கியப் பணி ஆற்றியவர். 33 ஆண்டுகளாக செயற்கைக் கோள்களை ஏவும் பணிகளில் சிவனின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதை தமிழர்கள் மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்தியர்களும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.