Kathir News
Begin typing your search above and press return to search.

எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு சவால் விடும் இஸ்ரோ: மீண்டும் பயன்படுத்தக்கூடிய உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆர்எல்வி விண்கலம் ரெடி!

எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு சவால் விடும் இஸ்ரோ: மீண்டும் பயன்படுத்தக்கூடிய உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆர்எல்வி விண்கலம் ரெடி!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Nov 2022 12:13 PM IST

ஆர்எல்வி சோதனை

ஆர்எல்வி எனப்படும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்கலத்தை விண்ணில் ஏவி, அதை கடலில் இறக்கும் சோதனையை இஸ்ரோ கடந்த 2016-ம் ஆண்டு மேற்கொண்டது. அடுத்து விண்கலத்தை ஓடுதளத்தில் விமானம் போல் தரையிறக்கும் சோதனையை இஸ்ரோ விரைவில் மேற்கொள்ளவுள்ளது. இந்த சோதனை கர்நாடக மாநிலத்தின் சித்ரதுர்கா மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.

என்ன நடக்கும்?

பரிசோதனையின் போது விண்கலம் ஹெலிகாப்டர் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு, ஓடுதளத்திலிருந்து 3 அல்லது 5 கி.மீ உயரத்தில் இருந்து விடுவிக்கப்படும். அதன்பின் விண்கலம் விமானம் போல் பறந்து வந்து , விமான தளத்தின் ஓடு பாதையில் சக்கரங்கள் உதவியுடன் தரையிறங்கும். இது போன்ற பரிசோதனையை இஸ்ரோ மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.

இஸ்ரோ தலைவர் சோம்நாத் கருத்து

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்கலத்தை ஓடுதளத்தில் தரையிறங்க வைக்கும் சோதனையை இஸ்ரோ விரைவில் மேற்கொள்ளவுள்ளது. பருவநிலை தற்போது நன்றாக இல்லை. சாதகமான சூழ்நிலை நிலவும்போது, ஆர்எல்வி விண்கலத்தை ஓடுதளத்தில் தரையிறக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றார்.

Input From: Economictimes


Next Story
கதிர் தொகுப்பு
Trending News