Kathir News
Begin typing your search above and press return to search.

'குதுப்மினார் அல்ல அது சூரிய கோபுரம்' - தொல்பொருள் ஆய்வாளர் கூறிய பரபரப்பு தகவல்

'குதுப்மினார் ராஜா விக்ரமாதித்தனால் கட்டப்பட்டது' என முன்னாள் தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரி கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குதுப்மினார் அல்ல அது சூரிய கோபுரம் - தொல்பொருள் ஆய்வாளர் கூறிய பரபரப்பு தகவல்

Mohan RajBy : Mohan Raj

  |  20 May 2022 12:45 PM GMT

'குதுப்மினார் ராஜா விக்ரமாதித்தனால் கட்டப்பட்டது' என முன்னாள் தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரி கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செங்கற்களால் கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய கோபுரம் என்ற பெருமையைப் பெற்ற குதுப்மினார் 73 மீட்டர் உயரத்துடன் சற்று சாய்வாக உள்ள அமைப்பை கொண்டது, இந்தியாவின் நினைவு சின்னங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் (ஏ.எஸ்.ஐ) முன்னாள் இயக்குனர் தரம்வீரர் சர்மா, 'குதுப்மினார் ராஜா விக்ரமாதித்யாவினால் கட்டப்பட்டது இது குத்புதீன் ஐபக் கட்டவில்லை' என கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து அவர் கூறியதாவது, 'இது குதுப்மினார் அல்ல சூரிய கோபுரம் (கண்காணிப்பு கோபுரம்) இது ஐந்தாம் நூற்றாண்டில் ராஜா விக்ரமாதித்தனால் கட்டப்பட்டது குட்புதீன் ஐபக் என்பவரால் கட்டப்பட்டது அல்ல. இது தொடர்பாக என்னிடம் நிறைய ஆதாரங்கள் உள்ளன' என கூறி உள்ளார்.

மேலும் இது தொடர்பாக அவர் கூறியதாவது, 'குதுப்மினார் கோபுரம் 25 அங்குல சாய்வு நிலையில் உள்ளது இது சூரியனை கண்காணிக்க உருவாக்கப்பட்ட அதனால்தான் ஜூன் 21-ஆம் தேதி சங்கராந்தி இடைப்பட்ட காலத்தில் குறைந்த பட்சம் அரைமணி நேரம் அந்த பகுதியில் நிழல் ஏற்படாமல் இருக்கும். இது அறிவியல் மற்றும் தொல்பொருள் உண்மை, இரவு வானில் துருவ நட்சத்திரத்தை அதற்கான குதுப்மினார் கூட வடக்கு நோக்கி உள்ளது எனவே குதுப்மினார் என அழைக்கப்படுவது அதன் அருகில் உள்ள மசூதியுடன் தொடர்புடையது அல்ல' எனக் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News