Kathir News
Begin typing your search above and press return to search.

காஷ்மீர் விமானப்படை தாக்குதல் வழக்கு: என்.ஐ.ஏ.க்கு மாற்றி உள்துறை அமைச்சகம் உத்தரவு.!

டிரோன்கள் எந்த பாதை வழியாக வந்தன என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஜம்மு விமானப்படை தளம் சர்வதேச எல்லையில் இருந்து 14 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இதற்கு பின்னால் பாகிஸ்தான் இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர்.

காஷ்மீர் விமானப்படை தாக்குதல் வழக்கு: என்.ஐ.ஏ.க்கு மாற்றி உள்துறை அமைச்சகம் உத்தரவு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  29 Jun 2021 10:36 AM IST

காஷ்மீரில் உள்ள விமான நிலைய வளாகத்துக்குள் இந்திய விமானப்படை தளம் அமைந்துள்ளது. விமானப்படை கட்டுப்பாட்டில் விமான நிலையம் இயங்கி வருகிறது.

இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில் 2 டிரோன்கள் ஜம்மு விமானப்படை தளத்தை நோக்கி வந்தது. அப்போது டிரோனில் இருந்து 2 குண்டுகள் விமான தளத்தின் மீது போடப்பட்டது. அப்போது தொழில்நுட்ப பகுதியில் உள்ள ஒற்றை மாடி கட்டிடத்தின் மீது விழுந்தது. இதில் கட்டிடத்தின் மேற்பரப்பு சேதமடைந்தது. மற்றொரு குண்டு திறந்தவெளியில் விழுந்தது.

இந்த சம்பவத்தின் இரண்டு பேர் காயமடைந்தனர். உயிரிழப்புகளோ அல்லது பெரிய சேதமோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது பற்றி தகவல் கிடைத்தவுடன் டெல்லியில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விமானப்படை தளத்திற்கு சென்று விசாரணையை மேற்கொண்டனர். விமான நிலையம் முழுவதும் தங்களின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

டிரோன்கள் எந்த பாதை வழியாக வந்தன என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஜம்மு விமானப்படை தளம் சர்வதேச எல்லையில் இருந்து 14 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இதற்கு பின்னால் பாகிஸ்தான் இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீர் விமானப்படை தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்.ஐ.ஏ) உள்துறை அமைச்சகம் ஒப்படைத்துள்ளது. இதனை நிகழ்த்திய சதிகாரர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என கூறப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News