Begin typing your search above and press return to search.
ஜம்மு&காஷ்மீர்: பயங்கரவாத மறைவிடம் கண்டுபிடிப்பு, வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல்!
ஜம்மு&காஷ்மீர்: பயங்கரவாத மறைவிடம் கண்டுபிடிப்பு, வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல்!

By : Saffron Mom
ஞாயிற்றுக்கிழமை ராஜவுரியில் காவாஸ் பகுதியில் அடர்ந்த காட்டில் இராணுவம் மற்றும் ஜம்மு&காஷ்மீர் காவல்துறை சேர்ந்து சரியான நேரத்தில் நடத்திய தேடுதல் வேட்டையில் பெரியளவிலான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பாதுகாப்புப் படை வெளியிட்ட அறிக்கையில்,"ராஜவுரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறை சரியான நேரத்தில் நடத்திய தேடுதல் நடவடிக்கையால் அந்த பகுதியில் பயங்கரவாத அமைப்புகள் நடக்கவிருந்த பயங்கரவாத திட்டம் முறியடிக்கப்பட்டது," என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
உளவுத்துறை நடத்திய ரகசியத் தகவலின் படி இன்று இராணுவம் மற்றும் ஜம்மு&காஷ்மீர் காவல்துறை தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது.
"தேடுதல் நடவடிக்கையில் AK 47 துப்பாக்கி, அதற்கான தோட்டாக்கள், AK 47 வெடிமருந்துகள், இரண்டு சீனத் துப்பாக்கிகள், ஐந்து UBGL குண்டுகள் மற்றும் ரேடியோ," ஆகியவை மீட்டெடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. "மேலும் சரியான நேரத்தில் மீட்டெடுக்கப்பட்டுள்ள வெடிமருந்துகள் மற்றும் துப்பாக்கிகளால் இந்த அமைதியான நாட்டில் நடக்கவிருந்த பெரியளவிலான பாதிப்பு தடுக்கப்பட்டது," என்று கூறப்பட்டிருந்தது.

மேலும் இந்த ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கையானது அமைதியை நிலைநாட்ட தெற்கு பிற் பஞ்சால் பகுதியை உறுதி செய்வதற்கான நடவடிக்கையாகும் என்று கூறப்பட்டிருந்தது.
Next Story
